ஒரு ஐபோன் வாங்க ஒரு இந்தியர் எத்தனை நாட்கள் வேலை செய்ய வேண்டும்…புதிய ஆராய்ச்சித் தகவல்!!!

Author: Hemalatha Ramkumar
27 September 2021, 3:32 pm
Quick Share

ஐபோன் 13 இறுதியாக இந்தியாவில் வாங்குபவர்களின் வீட்டு வாசலிற்கு வரத் தொடங்கி விட்டது. புதிய ஐபோனை வாங்கக்கூடிய பலர் ஏற்கனவே அதன் புதிய அம்சங்களை முயற்சிப்பதில் உற்சாகமாக இருந்தாலும், இந்தியாவில் சாதனத்தின் கட்டுப்படியாகாத தன்மை காரணமாக, அதனை வாங்க முடியாதவர்கள் வாட்ஸ்அப்பில் ஐபோன் குறித்த பல மீம்களை பகிர்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இருப்பினும், மனி சூப்பர் மார்க்கெட்டின் ஒரு புதிய ஆராய்ச்சி ஒரு வித்தியாசமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஐபோன் விலை ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை வேரியன்ட் ஐபோன் 13 (128 ஜிபி) வாங்க ஒருவர் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், மற்றும் இறக்குமதி வரிகள், வரி, நாணய ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஐபோன் விலைகள் மாறுபடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த ஆராய்ச்சியின் படி, ஒரு இந்தியன் ஒரு ஐபோன் வாங்குவதற்கு 724.2 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். இது சுமார் 30 வேலை நாட்கள்.

இந்த பட்டியலில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு ஐபோன் வைத்திருக்க, நீங்கள் 775.3 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச வேலை நேரத்துடன் நீங்கள் ஒரு ஐபோனை வாங்கக்கூடிய நாடு சுவிட்சர்லாந்து ஆகும். அங்கு குறைந்தபட்ச ஊதியத்தில் 34.3 மணிநேர வேலை தேவை. ஆச்சரியப்படும் விதமாக, ஆப்பிள் உருவான அமெரிக்கா, 49.5 மணிநேரத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நாடுகளில் குறைந்தபட்ச ஊதியம் இந்தியா அல்லது பிலிப்பைன்ஸை விட அதிகமாக இருப்பதாலும், குறைந்த இறக்குமதி வரிகள் அல்லது நாணய ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றுடன் ஃபோன் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.

Views: - 284

0

0