SBI ATM / டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடுபோய்விட்டால் முதலில் இதை பண்ணுங்க

Author: Dhivagar
13 October 2020, 8:50 am
How To Block SBI ATM Card
Quick Share

நீங்கள் ஒரு வேளை உங்கள் ATM கார்டைத் தவறவிட்டுவிட்டால் அல்லது யாரேனும் திருடுவிட்டால் மோசடி செய்பவர்களால் டெபிட் கார்டை தவறாகப் பயன்படுத்தக்கூடும். 

கார்டு உங்களிடமே இருக்கும்போதும் கூட மோசடிகள் நடக்கக்கூடும். சரி உங்கள் கார்டு தொலைந்துவிட்டால் அதை எப்படி உடனே பிளாக் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

SMS செய்து SBI ATM கார்டை பிளாக் செய்வது எப்படி? How To Block SBI ATM Card Via SMS?

  • SBI ATM கார்டை பிளாக் செய்ய, 567676 என்ற எண்ணுக்கு “BLOCK ஸ்பேஸ் உங்கள் ATM கார்டின் கடைசி 4 இலக்க எண்களை டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். 
  • உங்கள் கார்டுடன் தொடர்புடைய வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே இந்த SMS அனுப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • “BLOCK” என்ற சொல் Capital letter களில் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க.

Call செய்து SBI ATM கார்டை பிளாக் செய்வது எப்படி?How To Block SBI ATM Card Via Phone Call?

  • SBI 24/7 ஹெல்ப்லைன் எண்களைக் கொண்டுள்ளது, அவை மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்கள் வழியாக அணுகக்கூடியவை. 
  • ATM கார்டைத் பிளாக் செய்வதற்கான கோரிக்கையை எழுப்ப பின்வரும் மூன்று ஹெல்ப்லைன் எண்களில் ஏதேனும் ஒன்றை அழைக்கவும்.
  • 1800 11 2211 (கட்டணமில்லாது)
  • 1800 425 3800 (கட்டணமில்லாது)
  • 080 2659 9990

நெட்பேங்கிங் பயன்படுத்தி SBI ATM கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி?How To Block SBI ATM Card Online Using Netbanking?

  • உங்கள் Username மற்றும் Password மூலம் www.onlinesbi.com இல் Login செய்ய வேண்டும்.
  • “e-Services” எனும் Tab இன் கீழ், “ATM card services”> “Block ATM card” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நீங்கள் பிளாக் செய்ய தேர்வுசெய்த கார்டு இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்த பக்கம் செயலில் உள்ள மற்றும் தடுக்கப்பட்ட கார்டு எண்களை முதல் நான்கு மற்றும் கடைசி நான்கு இலக்கங்களுடன் காண்பிக்கும்.
  • நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுத்து கார்டை பிளாக் செய்வதற்கான காரணம் அதாவது “reason” என்பதை தேர்வு செய்யவும்.
  • விவரங்களைச் சரிபார்த்து, “Submit” என்பதைக் கிளிக் செய்க.
  • அடையாள அங்கீகாரத்தின் இரண்டு முறைகளில் ஒன்றைத் தேர்வுசெய்க: SMS OTP அல்லது Profile Password ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
  • SMS OTP அல்லது சுயவிவர கடவுச்சொல்லை உள்ளிட்டு “உறுதிப்படுத்து” என்பதைக் கிளிக் செய்க.
  • கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பிப்பதற்கான ஒரு மெசேஜ் டிக்கெட் எண்ணுடன் காண்பிக்கப்படும். 
  • ATM-கம்-டெபிட் கார்டு இப்போது பிளாக் செய்யப்பட்டுள்ளது. எதிர்கால தேவைக்கு டிக்கெட் எண்ணை நீங்கள் சேமித்துக்கொள்ளுங்கள்.

Views: - 53

0

0