திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறுவது எப்படி?

5 January 2021, 9:54 am
How to book Tirumala Darshan tickets online
Quick Share

ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி பாலாஜி கோயில் நாட்டின் மிகவும் பிரபலமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல் இது மிகவும் பரபரப்பான வழிபாட்டு தளங்களில் ஒன்றாகும். ஒரு சராசரி நாளிலும் கூட 60,000 முதல் 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் வழிபாட்டுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதம் பெற வருகிறார்கள்.

​​நீங்களும் திருப்பதி பாலாஜி கோயிலுக்கு செல்ல திட்டமிட்டால், தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முன்பதிவு செய்ய வழியுண்டு என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

திருமலை தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

How to book Tirumala Darshan tickets online

படி 1: TTD அதிகாரப்பூர்வ வலைத்தளமான tirumala.org என்பதைப் பார்வையிடவும்.

படி 2: அடுத்து, முகப்பு பக்கத்தில் Online booking எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

படி 3: ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, நீங்கள் ஆன்லைனில் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். Sign-up எனும் விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் கணக்கை பதிவு செய்யுங்கள்.

படி 4: நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கியதும், மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி முகப்புப் பக்கத்திலிருந்து Log in செய்யலாம்.

படி 5: உள்நுழைந்த பிறகு, நீங்கள் e-entry darshan என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடன் வருபவர்களின் விவரங்கள் மற்றும் உங்களுக்கு கூடுதல் லட்டுக்கள் போன்றவை தேவைப்பட்டால் அந்த விவரங்களையும் நீங்கள் உள்ளிட வேண்டும்.

படி 6: அடுத்து, தேதியைத் தேர்ந்தெடுத்து (select the date), கிடைக்கக்கூடிய நேரத்திற்கான கட்டணங்களைச் சரிபார்க்கவும். Slot ஐ தேர்ந்தெடுத்து Continue என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 7: இப்போது, ​​உங்களுடன் வழிபாட்டுக்கு வரும் மற்றவர்களின் விவரங்களை உள்ளிட வேண்டும். அவர்களின் சரியான அடையாள விவரங்களையும் உள்ளிடவும்.

படி 8: அது முடிந்ததும், கட்டண (payment) விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் வசதியான பயன்முறையின் படி ஆன்லைனில் பணம் செலுத்துங்கள். வெற்றிகரமாக கட்டணம் செலுத்தியதும், உங்கள் டிக்கெட்டுகளைப் பெறுவீர்கள். அதை நீங்கள் PDF ஆக பதிவிறக்கம் செய்து தரிசனத்துக்குச் செல்லும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

Views: - 66

1

0