இன்ஸ்டாகிராம் பயனர்களே! Instagram Reels வீடியோக்களை எப்படி டவுன்லோடு செய்யனும் தெரியுமா?

17 April 2021, 5:58 pm
How to download Instagram Reels videos in mobile, learn the easy way here
Quick Share

டிக்டாக் தடை செய்யப்பட்டதிலிருந்து இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் அம்சம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த அம்சத்தின் மூலம் மில்லியன் கணக்கான பயனர்கள் தங்கள் குறுகிய வீடியோக்களை உருவாக்கி அவற்றை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த ரீல்ஸ் வீடியோக்கள் நிறைய பார்க்கப்படும் வீடியோக்களாகவும் இருக்கின்றன. நீங்களும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்ப்பவராக இருந்தால், அவற்றை டவுன்லோடு செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கலாம். இன்ஸ்டாகிராமில் இதற்கான அம்சம் இல்லை. ஆனால் அதற்கு ஒரு வழி இருக்கிறது, அதை தான் இன்று தெரிந்து கொள்ள போகிறோம்.

Android பயனர்கள் இது போன்ற Instagram வீடியோக்களை பதிவிறக்க:

  • முதலில், கூகிள் பிளே ஸ்டோருக்குச் சென்று Downloader for the Instagram ஆப்-ஐ பதிவிறக்க வேண்டும்.
  • பயன்பாட்டைத் திறந்து ID ஐ உருவாக்க வேண்டும்
  • இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்குச் சென்று நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீல்ஸ் வீடியோவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதைச் செய்த பிறகு, மூன்று-புள்ளி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் Link ஐ copy செய்யலாம்
  • இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கான வீடியோ டவுன்லோடரைத் திறக்கவும், இப்போது நீங்கள் Copy செய்த வீடியோவின்  URL தானாக Paste ஆகும்.
  • இப்போது உங்கள் தொலைபேசியின் கேலரிக்குச் செல்லுங்கள், அங்கே ரீல்ஸ் வீடியோ டவுன்லோடு ஆகியிருக்கும்

ஐபோன் பயனர்கள் ரீலிஸ் வீடியோவை பதிவிறக்கம் செய்ய:

  • முதலில், ஆப் ஸ்டோருக்குச் சென்று InSaver for Instagram ஆப்-ஐ பதிவிறக்க வேண்டும்.
  • பயன்பாட்டைத் திறந்து ID ஐ உருவாக்க வேண்டும்.
  • InSaver for Instagram ஆப்-ஐ திறக்கவும், நீங்கள் copy செய்த URL தானாக Paste ஆகும்.
  • அதை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நினைவில் கொள்க: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு, நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டின் உதவியைப் பெற வேண்டும் இது எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை பிளே ஸ்டோரில் பயனர்களின் மதிப்புரைகள் மூலம் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

Views: - 191

0

0