இந்த மொபைல் நுட்ப ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சு வச்சிக்கோங்க!

Author: Dhivagar
4 October 2020, 7:50 pm
How To Hide Apps In Realme Smartphones
Quick Share

ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் கடந்த சில ஆண்டுகளாக செம்மையாக பிரபலமடைந்துள்ளன. ரியல்மீ நிறுவனம் பல சிறந்த ஸ்மார்ட்போன்களை பட்ஜெட், மிட் ரேஞ்ச் மற்றும் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மீ நர்சோ தொடர், ரியல்மீ C தொடர் போன்ற சாதனங்கள் இந்திய பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. மென்பொருள் அம்சங்கள் குறித்து பார்க்கையில், சில கவனிக்கத்தக்க விஷயங்களைக் கொண்டுள்ளது.

ரியல்மீ ஸ்மார்ட்போனில் பயன்பாடுகளை மறைப்பது எப்படி?

முதலாவதாக, ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் ரியல்மீ UI உடன் இயங்குகின்றன. இதில் ரியல்மீ ஆப் லாக் என்ற அம்சத்தை வழங்குகிறது. இந்த அம்சம் உங்கள் முகப்புத் திரையை சிறிதாக்க உதவுகிறது, இது உங்களுக்கு மினிமலிஸ்ட் தோற்றத்தையும், பயன்படுத்த எளிதான உணர்வையும் தருகிறது. அதுமட்டுமில்லாமல் உங்கள் ரியல்மீ ஸ்மார்ட்போனில் ஆப்களை மறைத்து வைக்கவும் முடியும், அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க:

  • உங்கள் ரியல்மீ ஸ்மார்ட்போனில் Settings ஐ திறக்கவும்.
  • Security என்பதை தேர்ந்தெடுத்து App Lock என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து, ஆப் லாக் கடவுச்சொல் கொண்டு இயங்குவதால் பயன்பாடுகளுக்கான PassCode சரிபார்ப்பை இயக்க வேண்டும்.
  • இது முடிந்ததும், டிஸ்பிளேவில் ஹோம்ஸ்கிரீன் ஐகானை மறைக்கும்படி கேட்கப்படும். உங்கள் ரியல்மீ ஹோம்ஸ்கிரீனில் இருந்து ஆப் ஐகான்களை மறைக்க இந்த அம்சத்தை இயக்கவும்.
  • அடுத்து, உங்கள் முகப்புத் திரையில் இருந்து மறைக்க விரும்பும் பயன்பாடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • தொலைபேசி மேலும் இரண்டு விருப்பங்களை காண்பிக்கும் – ஒன்று ‘Don’t Display in Recent Tasks’ மற்றும் அடுத்தது  ‘Don’t Display Notifications’. அறிவிப்புகள் மற்றும் சமீபத்திய செயல்பாடுகளைத் தவிர்க்க விரும்பினால் இவற்றையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அவ்வளவுதான்! நீங்களும் ரியல்மீ பயனராக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Views: - 61

0

0