Google Pay மூலம் மின்சார கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

Author: Dhivagar
28 June 2021, 7:35 am
How to pay electricity bill using Google Pay
Quick Share

கூகிள் பே என்பது ஒரு ஆன்லைன் பண பரிவர்த்தனை தளம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், இதில் கிடைக்கும் சேவைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை, அப்படியே தெரிந்தாலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. கூகிள் பே அதன் பயனர்களை சேவை வழங்குநர்கள், மற்ற பயனர்கள் மற்றும் வணிகர்களுக்கு பணம் செலுத்த மற்றும் பெற அனுமதிக்கிறது. 

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பரிசு மற்றும் வெகுமதி அட்டைகள் போன்ற உங்கள் நிதி தகவல்களை எதிர்காலத்தில் ஆன்லைனில் பணம் செலுத்த பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் உதவுகிறது. Google Pay உடன் எந்த நேரத்திலும் ஆன்லைன் ஷாப்பிங், கட்டணம் செலுத்துதல் மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றுக்கான பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

நுகர்வோர் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் கட்டண முறையைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களை செலுத்த கூகிள் பே அனுமதிக்கிறது; UPI அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மற்றும் வாலட் என தங்களுக்கு விருப்பமான முறையில் பணம் செலுத்தலாம். 

GPay இல் வாடிக்கையாளர்கள் பல்வேறு மின்சார வாரியங்கள் / நிறுவனங்களுக்கும் கூட மின்சார கட்டணங்களை செலுத்தலாம். ஆனால் இந்த சேவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிவித்தில்லை.

Google Pay ஐப் பயன்படுத்தி மின்சார கட்டணங்களை செலுத்த படிப்படியான வழிகாட்டுதலை இங்கே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

  • படி 1: உங்கள் தொலைபேசியில் Google Pay பயன்பாட்டைத் திறக்கவும்.
  • படி 2: திரையின் அடிப்பகுதிக்கு ஸ்கிரோல் செய்து, “+ New Payment” எனும் விருப்பத்தை கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
  • படி 3: இப்போது அடுத்ததாக “Bill Payments” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • படி 4: வெவ்வேறு பில் கட்டண விருப்பங்களிலிருந்து ‘Electricity’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • படி 5: பின்னர் நீங்கள் பணம் செலுத்த விரும்பும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பணம் செலுத்து TamilNadu Electricity Board (TNEB) எனும் விருப்பத்தினை கிளிக் செய்ய வேண்டும்.
  • படி 6: TNEB ஐ தேர்ந்தெடுத்ததும், கட்டணம் செலுத்த உங்கள் ‘Consumer Number’ எனப்படும் நுகர்வோர் கணக்கு எண்ணை இணைக்க வேண்டும். அதோடு உங்கள் பெயரையும் உள்ளிட வேண்டும்.
  • படி 7: கட்டணம் தொகை அதிலேயே காண்பிக்கப்பட்டும். Pay என்பதை கிளிக் செய்து UPI PIN ஐப் பயன்படுத்தி பில் செலுத்தலாம்.

Views: - 352

0

0