எரிச்சலூட்டும் வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டை டாஸ்க்பாரில் இருந்து அகற்ற வேண்டுமா… இதோ உங்களுக்கான வழி!!!

Author: Hemalatha Ramkumar
24 September 2021, 6:50 pm
Quick Share

உலகெங்கிலும் உள்ள சமீபத்திய செய்திகளை அணுக பயனர்களுக்கு விரைவான வழியை வழங்க மைக்ரோசாப்ட் சமீபத்தில் டாஸ்க்பாரில் ஒரு வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டைச் சேர்த்தது. மைக்ரோசாப்ட் இந்த அம்சம் “பயன்பாடுகள், வலைத்தளங்கள் மற்றும் பிற சாதனங்களுக்கு இடையில் மாறுவதற்கான கவனச்சிதறல் இல்லாமல், உங்களுக்கு முக்கியமான தகவல்களுக்கு எளிதாக அணுகலை வழங்குகிறது” என்று கூறுகிறது.

இந்த அம்சம் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதை விரைவாகப் பார்க்க ஒரு நல்ல வழியை வழங்கினாலும், ஒவ்வொருவருக்கும் இந்த விட்ஜெட்டின் மேல் உங்கள் மவுஸ் கர்சரை நகர்த்தும் போது, ​​சிலருக்கு இது எரிச்சலூட்டலாம். இது முழு செய்திகளுடன் கூடிய பெட்டியைக் கொண்டுள்ளது. அதாவது விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நியூஸிலிருந்து பிற தகவல்கள் வரை இதில் உள்ளன. அம்சம் இயல்பாக இயக்கப்பட்டிருக்கிறது மற்றும் நீங்கள் அதை முடக்கலாம் அதாவது டிசேபிள் செய்யலாம்.

மைக்ரோசாப்ட் வானிலை நிலைகளைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பெற உங்கள் இருப்பிடத்தை அப்டேட் செய்ய உங்களை அனுமதிக்கிறது மேலும் உங்கள் செய்தி ஊட்டத்தையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம். போக்குவரத்து, நிதி மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களைச் சரிபார்க்கவும் விருப்பங்களும் உள்ளன. இருப்பினும், நீங்கள் இந்த விட்ஜெட்டைப் பார்க்க விரும்பாதவராக இருந்தால், அதை அகற்ற கீழே உள்ள படிகளைப் பின்பற்றலாம்.

விண்டோஸ் 10: டாஸ்க் பாரில் இருந்து வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டை எப்படி அகற்றுவது?
படி 1: முதலில், டாஸ்க் பாரில் உள்ள வெற்று இடத்தில் வலது கிளிக் செய்து செய்திகள் மற்றும் ஆர்வங்களைத் (News and interests) தேர்ந்தெடுக்கவும்.

படி 2: நீங்கள் அதை திறந்தவுடன், டாஸ்க்பாரில் இருந்து வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டை அகற்ற “Turn off” விருப்பத்தை கிளிக் செய்யவும்.

குறிப்பு: செய்தி மற்றும் ஆர்வங்கள் விட்ஜெட்டை இயக்குவதற்கான செயல்முறையும் இதே போன்ற ஒன்று தான். நீங்கள் டாஸ்க் பாரில் வலது கிளிக் செய்யலாம்> “News and interests”> Show icon and text.

விட்ஜெட்டை முழுவதுமாக நீக்க விரும்பாதவர்கள் “Show icon only” அம்சத்தை தேர்வு செய்யலாம். இது ஒரு சிறிய விட்ஜெட்டைக் காண்பிக்கும். இது உங்கள் டாஸ்க் பாரில் குறைந்த இடத்தைப் பிடிக்கும்.

Views: - 274

0

0