Google Pay செயலியில் UPI PIN எண்ணை ரீசெட் பண்ண கத்துக்கலாம் வாங்க!

21 November 2020, 7:48 pm
How To Reset UPI PIN In Google Pay
Quick Share

தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது, ​​பலர் டிஜிட்டல் கட்டண சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்குகினார்கள். பிரபலமான கட்டண சேவைகளில் ஒன்று கூகிள் பே ஆகும், இது நண்பர்களுக்கு பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும், வணிகர்களுக்கு பணம் செலுத்துவதற்கும் மேலும் பலவற்றிற்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

கூகிள் பே என்பது ஒரு UPI சேவையாகும், இது பயனர்களை UPI PIN வழியாக பணம் செலுத்த அனுமதிக்கிறது. கட்டண சேவையில் நீங்கள் வங்கிக் கணக்கைச் சேர்க்கும்போதெல்லாம், ஒரு UPI PIN ஐ அமைக்குமாறு கேட்கப்படுவீர்கள். பயனர்கள் விரும்பும் போதெல்லாம் இந்த PIN ஐ மாற்றலாம் அல்லது மீட்டமைக்கலாம் (Reset) என்பது குறிப்பிடத்தக்கது. Google Pay இல் UPI PIN ஐ மாற்ற அல்லது மீட்டமைக்க நீங்கள் விரும்பினால், கீழேயுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

Google Pay இல் UPI PIN ஐ மாற்றுவது எப்படி?

Google Pay இல் UPI PIN ஐ மாற்ற கீழேயுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

படி 1: முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் Google Pay ஐத் திறக்கவும்.

படி 2: திரையின் மேல் இடது மூலையில் உள்ள சுயவிவர புகைப்படத்தில் கிளிக் செய்யவும்.

படி 3: திறக்கும் புதிய பக்கத்தில் ‘Bank Account’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4: நீங்கள் திருத்த விரும்பும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: மூன்று புள்ளிகளுடன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 6: ‘Change UPI PIN’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 7: மேலும் UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய PIN எண்ணை உருவாக்கவும்.

படி 8: உறுதிப்படுத்த அதே UPI PIN ஐ மீண்டும் உள்ளிடவும்.

நீங்கள் தவறான UPI PIN ஐ மூன்று முறைக்கு மேல் உள்ளிட்டால், நீங்கள் 24 மணி நேரமும் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது. அவ்வாறான நிலையில், நீங்கள் Google Pay இல் UPI PIN ஐ மீட்டமைக்கலாம். அவ்வாறு செய்ய, குறிப்பிட்ட வங்கிக் கணக்கோடு தொடர்புடைய டெபிட் கார்டு உங்களுக்குத் தேவைப்படும்.

Google Pay இல் UPI PIN ஐ மீட்டமைப்பது எப்படி?

Google Pay இல் UPI PIN ஐ மீட்டமைக்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

படி 1: முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் Google Pay ஐத் திறக்கவும்.

படி 2: மேல் இடதுபுறத்தில், உங்கள் புகைப்படத்தைத் தேர்நதெடுக்கவும்.

படி 3: Bank Account என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4: நீங்கள் திருத்த விரும்பும் வங்கிக் கணக்கைத் தட்டவும்.

படி 5: Forgot UPI PIN என்ற விருப்பத்தைக் கிளிக் செய்க.

படி 6: உங்கள் டெபிட் கார்டு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள் மற்றும் அதன் காலாவதி தேதியை உள்ளிடுக.

படி 7: மேலும் UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய PIN எண்ணை உருவாக்கவும்.

படி 8: SMS மூலம் நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிடவும்.

அவ்வளவுதான்! Google Pay இல் உங்கள் UPI PIN மீட்டமைக்கப்பட்டது.

Leave a Reply