தெரியாமல் டெலீட் செய்த ஒரு ஃபைலை டிரைவில் இருந்து எப்படி எடுப்பது???

Author: Hemalatha Ramkumar
7 October 2021, 6:05 pm
Quick Share

கடந்த ஆண்டில் கூகிள் அதன் ஸ்டோரேஜ் மற்றும் டிரைவில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன்படி டிரைவில் இருந்து டெலீட் செய்யப்பட்ட ஃபைல்கள் 30 நாட்கள் வரை இருக்கும் என்றும் அதன் பிறகு நிரந்தரமாக டிரைவில் இருந்தும் நீக்கப்பட்டு விடும் என்பதை கூகிள் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது. இதனால் தவறுதலாக டெலீட் செய்யும் ஃபைல்களை நாம் இழக்க நேரிடும். ஆகவே, தவறுதலாக நீங்கள் டெலீட் செய்த மிக முக்கியமான ஒரு ஃபைலை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

■ஸ்மார்ட்போனில் இருந்து எடுக்க:
*இதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகிள் டிரைவ் செயலிக்கு செல்லுங்கள்.
*அதில் இடதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
*அதில் “Bin” என்ற ஒரு ஆப்ஷனைப் பார்ப்பீர்கள்.
*அதை கிளிக் செய்து பார்த்தால் நீங்கள் முப்பது நாட்களுக்கு உள்ளாக டெலீட் செய்த அனைத்து ஃபைல்களும் அங்கு இருக்கும்.
*உங்களுக்கு தேவையான ஃபைலின் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் “Restore” என்ற ஆப்ஷனை காண்பீர்கள்.
*நீங்கள் அதை கிளிக் செய்தவுடன் “Item has been restored” என்ற வாக்கியத்தை காண்பீர்கள்.
*அவ்வளவு தான். அந்த ஃபைல் இதற்கு முன்பு சேவ் ஆன இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும்.

■PC அல்லது லேப்டாப்பில் இருந்து எடுக்க:
*இப்போது வெப் பிரவுசருக்குள் சென்று drive.google.com க்கு செல்லவும்.
*உங்கள் கூகிள் கணக்கை பயன்படுத்தி லாகின் செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
*அதில் “My Drive” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, இடது பக்கத்தில் காணப்படும் “Trash” என்பதை தட்டவும்.
*இதில் உங்களுக்கு தேவையான ஃபைலின் வலதுபக்கத்தில் உள்ள “Trash for my drive” என்பதை கிளிக் செய்யவும்.
*அதில் காணப்படும் இரண்டு ஐகான்களில் “Restore from Trash” என்பதை கிளிக் செய்யவும்.
*அவ்வளவு தான். உங்கள் ஃபைல் உங்களுக்கு மீண்டும் கிடைத்து விட்டது.

Views: - 395

1

0