போன் கேலரியில் வாட்ஸ்அப் மீடியா தானாக Save ஆவதை நிறுத்துவது எப்படி? .Nomedia ஃபைல் உருவாக்குவது எப்படி?

28 August 2020, 8:24 am
How to stop saving WhatsApp media to your phone's gallery
Quick Share

நீங்கள் ஒரு மீடியா ஃபைலைப் பதிவிறக்கும் போது, ​​அது தானாகவே உங்கள் தொலைபேசியின் கேலரியில் சேமிக்கப்படும். Media visibility விருப்பம் default ஆகவே இயக்கப்பட்டிருக்கும். இதன்  மூலம் உங்கள் போனை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் ஃபைலைப் பார்க்க முடியும். ஆனால், இதை மறைத்து வைக்க ஒரு ஐடியா இருக்குனு தெரியுமா உங்களுக்கு? அதை தான் நாம் இன்று இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்கள் அனைத்து chat மற்றும் Group-களிடமிருந்து மீடியா சேமிக்கப்படுவதைத் தடுக்க:

 • முதலில் உங்கள் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
 • அதில் மூன்று புள்ளி போல் இருக்கும் More options பட்டனை பிரெஸ் செய்யுங்கள்.
 • அடுத்து Settings ஆப்ஷனையும் அதற்கடுத்து Chats ஆப்ஷனையும் தேர்வு செய்யுங்கள்.
 • அதில் உங்களுக்கு Media Visibility  என்ற ஆப்ஷன் இயக்கப்பட்டிருக்கும். அதை Turn Off செய்து விடுங்கள்.

சரி இப்போது, ஒரு குறிப்பிட்ட chat மற்றும் Group-களிடமிருந்து மீடியா சேமிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

 • தனிப்பட்ட chat மற்றும் Group-ஐ திறக்கவும்.
 • மூன்று புள்ளி More Options ஐகனை பிரெஸ் செய்யுங்கள் 
 • View contact or Group info என்பதை பிரெஸ் செய்யுங்கள். இதில் நீங்கள் ஒரு Contact name அல்லது Group Subject ஐயும் தேர்வு செய்து கொள்ளலாம்.
 • இப்போது Media Visibility என்பதைப் பிரெஸ் செய்யவும்.
 • அதில் No என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்து OK கொடுக்கவும்.

.Nomedia கோப்பை உருவாக்குவது  எப்படி?

மாற்றாக, நீங்கள் WhatsApp images folder இல் .nomedia ஃபைலையும் உருவாக்கலாம். இது உங்கள் தொலைபேசியின் கேலரியில் இருந்து உங்கள் அனைத்து வாட்ஸ்அப் புகைப்படங்களையும் மறைத்து வைக்கும் என்பதை நினைவில் கொள்க.

 • Google Play Store இலிருந்து file explorer ஆப்பை பதிவிறக்கவும்.
 • file explorer ஆப்பில், Images ஃபோல்டரில் WhatsApp Images (Images/WhatsApp Images/) க்குச் செல்லவும்.
 • ஒரு முற்றுப்புள்ளி உடன் .nomedia என்ற பெயரில் ஒரு ஃபைலை உருவாக்கவும்.
 • இப்போது, உங்கள் WhatsApp Images அனைத்தும் போன் கேலரியில் இருந்து மறைக்கப்படும்.

உங்கள் தொலைபேசியின் கேலரியில் உங்கள் புகைப்படங்களை மீண்டும் நீங்கள் காண விரும்பினால் நீங்கள் உருவாக்கிய .nomedia கோப்பை நீக்கினால் போதும்.

Views: - 34

0

0