பேஸ்புக்கில் வீடியோக்கள் Auto-Play ஆவதை நிறுத்துவது எப்படி?
Author: Hemalatha Ramkumar9 August 2021, 1:00 pm
இன்று போன் இருக்கும் கைகளில் எல்லாம் ஒரு பேஸ்புக் அக்கவுண்டும் கட்டாயம் உள்ளதென்று சொல்லலாம். அந்தளவுக்கு பலர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். நிறைய பேர் இந்த பேஸ்புக் பயன்படுத்தினாலும் அதில் இருக்கும் சில நுணுக்கங்கள் பலருக்கும் தெரிவதில்லை.
நாம் பொதுவாக பேஸ்புக்கை இன்ஸ்டால் செய்து திறக்கும்போது, நம் Newsfeed ஐ ஸ்கிரோல் செய்யும்போது தானாகவே ஏராளமான வீடியோக்கள் Autoplay ஆகும். இதனால் மொபைல் டேட்டா கடகடவென தீர்ந்துவிடும். இதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். வீடியோ ஆட்டோ-ப்ளே விருப்பத்தை ஆஃப் செய்வதன் மூலம் ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் ஆட்டோ-ப்ளே ஆவதை நிறுத்த முடியும்.
உங்கள் டெஸ்க்டாப் பேஸ்புக்கில் வீடியோக்கள் தானாக இயங்குவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:
படி 1: உங்கள் டெஸ்க்டாப்பில் உங்கள் பேஸ்புக் கணக்கைத் திறந்து அதில் Login செய்யுங்கள்.
படி 2: வலது பகுதியில் கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்து “Settings” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: அடுத்து திரையின் இடது பக்கத்தில் உள்ள கருவிப்பட்டியில் உள்ள “Videos” எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
படி 4: “Auto-Play Videos” எனும் விருப்பத்திற்கு அருகில் உள்ள “Off” ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் ஐபோனில் ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் தானாக இயங்குவதை நிறுத்துவதற்கான வழிமுறைகள்:
படி 1: உங்கள் iOS சாதனத்தில் பேஸ்புக் ஆப் ஐத் திறக்கவும்.
படி 2: திரையின் கீழே மூன்று செங்குத்து கோடுகளுடன் ஹாம்பர்கர் ஐகானைக் கிளிக் செய்யவும்.
படி 3: திரையில் கீழே ஸ்கிரோல் செய்து “Settings and Privacy” என்பதைக் கிளிக் செய்யவும்
படி 4: பின்னர் “Settings” விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
படி 5: ஸ்கிரோல் செய்து “Media and Contacts” எனும் விருப்பத்தைக் கண்டுபிடிக்கவும்.
படி 6: “Videos and Photos.” என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: “Auto-Play” ஐகானைக் கிளிக் செய்யவும்.
படி 8: அடுத்து ஆட்டோ-பிளே ஆப்ஷனை ஆஃப் செய்ய “Never AutoPlay Videos” எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
ஆண்ட்ராய்டு போன்களில் ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் தானாக இயங்குவதை நிறுத்துவதற்கான வழிமுறைகள்
படி 1: உங்கள் Android சாதனத்தில் உங்கள் Facebook பயன்பாட்டைத் திறக்கவும்
படி 2: திரையின் மேலே உள்ள மூன்று அடுக்கு கோடுகளைக் கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது “Settings & Privacy” எனும் விருப்பத்தைத் தொடர்ந்து “Settings” எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
படி 4: கீழே ஸ்கிரோல் செய்து “Media and Contacts” எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
படி 5: “Autoplay” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6: இறுதியாக “Never Autoplay Videos” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
0
0