ஒரே ஒரு OTP மூலம் உங்கள் ப்ரீபெய்டு எண்ணை போஸ்ட்பெய்டுக்கு மாற்றுவது எப்படி?
12 September 2020, 2:15 pmநீங்கள் இப்போது பயன்படுத்தும் ப்ரீபெய்டு எண்ணைப் போஸ்ட்பெய்டாக மாற்ற விரும்பினால், உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி இருக்கிறது. அதற்கான புதிய விதிமுறைகளை கொண்டுவர TRAI திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை திருத்தியுள்ளது, இதன் மூலம் பயனர்கள் OTP மூலம் இணைப்பை மாற்ற முடியும்.
முந்தைய ஒழுங்குமுறையில், வாடிக்கையாளர்கள் இணைப்பை மாற்றுவதற்கு முன் படிவத்தை நிரப்ப வேண்டும். புதிய விதிமுறைகள் அடுத்த இரண்டு வாரங்களில் வர வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும், தற்போதைய விதிமுறைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில், நீங்கள் இந்த வழிமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும்.
பழைய முறைப்படி ப்ரீபெய்டு எண்ணை போஸ்ட்பெய்டாக மாற்றும் முறை:
முதலில், உங்கள் ஆபரேட்டரின் வாடிக்கையாளர் துறையை (customer department) அணுக வேண்டும். பின்னர், வாடிக்கையாளர் ஒரு போஸ்ட்பெய்ட் நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பிறகு, நீங்கள் முகவரிச் சான்று புகைப்படத்துடன், அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இது முடிந்ததும், வாடிக்கையாளர்கள் இடம்பெயர்வு படிவத்தை (migration form) நிரப்ப வேண்டும். பின்னர், நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் படி சில கட்டணங்களை செலுத்த வேண்டும். அந்த சேவை வழங்கும் நிறுவனம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும், மேலும் புதிய சிம் கார்டைப் பெறுவீர்கள். பதிவு செயல்முறை முடிந்ததும், நீங்கல் SIM பயன்படுத்த தொடங்க இரண்டு நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இந்த செயல்முறை மேலும் நீண்ட நேரமும் ஆகலாம், மற்ற செயல்முறையும் மிகவும் சிக்கலானது.
தற்போதுள்ள ப்ரீபெய்டு நெட்வொர்க்கிலிருந்து புதிய போஸ்ட்பெய்ட் இணைப்புகளை எப்படி பெறுவது ?
சமீபத்தில், CNBC வெளியிட்ட அறிக்கையின்படி, டிராய் விரைவில் புதிய ஒழுங்குமுறைகளைக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அறிவித்தது. தவிர, TRAI தலைவர் இந்த மாத இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளார். எனவே இது இந்த மாதத்திலேயே புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் என்று நம்பலாம்.
புதிய சேவைகளைப் பெறுவதற்கு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் கோரிக்கையை ஆபரேட்டருக்கு அனுப்ப வேண்டும், பின்னர் வாடிக்கையாளர் OTP ஐப் பெறுவார், அதாவது வாடிக்கையாளர்கள் எந்த படிவத்தையும் நிரப்ப தேவையில்லை. பின்னர், வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் பில்லிங்கைப் பதிவேற்ற வேண்டும், அவ்வளவுதான். உங்கள் ப்ரீபெய்டு இணைப்பு போஸ்ட்பெய்டாக மாற்றப்படும்.
0
0