ஸ்மார்ட்போன்களில் போன்பே வழியாக வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது எப்படி?

18 November 2020, 10:33 am
How To Transfer Money To Bank Account Via PhonePe On Smartphones
Quick Share

இந்தியாவில் டிஜிட்டல் கொடுப்பனவு ஆப்களின் பயன்பாடு மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. போன்பே, கூகிள் பே, பேடிஎம் போல பல கொடுப்பனவு பயன்பாடுகள் இருக்கும் போது திருட்டுபயம் எல்லாம் இல்லாமல் இருக்க நுகர்வோர் கைகளில், பர்ஸ்களில் பணம் எடுத்துச்  செல்வதற்குப் பதிலாக இ-வாலெட்டுகளைப் பயன்படுத்த விரும்புகின்றனர்.

இந்த பயன்பாடுகள் ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கும் பில்கள் செலுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டவை மட்டுமல்ல, வங்கி தொடர்பான பல வசதிகளையும் வழங்குகின்றன. 

கூகிள் பே மற்றும் பேடிஎம் தவிர அதிகம் பயன்படுத்தப்படும் UPI பயன்பாடுகளில் போன்பே இருப்பதால், போன்பே ஆப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வேறொருவருக்கு மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க. 

போன்பே வழியாக வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுவது எப்படி?

ஆன்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் பதிவிறக்குவதற்கு PhonePe UPI பயன்பாடு இலவசமாக கிடைக்கிறது. இந்த பயன்பாட்டை பிளேஸ்டோர் அல்லது ஆப்ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு

படி 1: உங்கள் ஸ்மார்ட்போனின் ஆப் கேலரியில் இருந்து போன்பே ஆப்-ஐத் திறக்கவும்.

படி 2: முகப்புப்பக்கத்தில் பல பண பரிமாற்றம் மற்றும் பிற விருப்பத்தை நீங்கள் காண முடியும். ‘To Account’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: அடுத்த கட்டத்தில் நீங்கள் பணத்தை மாற்ற வேண்டிய கணக்கை இணைக்க சேர்க்க வேண்டும். இதற்காக, ‘Add Beneficiary’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4: அடுத்த பக்கத்திலிருந்து வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும், கணக்கின் விவரங்களை நிரப்ப விருப்பம் கிடைக்கும்.

படி 5: வங்கி தகவளுடன் வெற்றிகரமாக உள்நுழைந்ததும், கணக்கைத் தேர்ந்தெடுத்து நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.

படி 6: அடுத்து கேட்கப்படும் ரகசிய PIN எண்ணை உள்ளிட வேண்டும். உங்கள்  வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதும்  உங்கள் போனுக்கு SMS வந்துவிடும். அவ்வளவுதான்!