இந்த 6 வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? உடனே EPFO தளத்தில் இதை பண்ணிடுங்க!

Author: Dhivagar
28 June 2021, 2:40 pm
how to update ifsc code in epf portal
Quick Share

ஆந்திர வங்கி, ஓரியண்டல் வங்கி, அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடெட் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி விவரங்களை தங்கள் PF கணக்கில் புதுப்பிக்க வேண்டுமென்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் நிகழ்ந்த வங்கிகளின் இணைப்பு காரணமாக, வங்கிகளின் IFSC Codes மாறியுள்ளது. பழைய IFSC code கள் ஏப்ரல் 1 முதல் செயலற்ற நிலையிலேயே இருப்பதால் பணியாளர்கள் மேற்சொன்ன 6 வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் IFSC Code ஐ புதுப்பிக்க வேண்டும்.

PF கணக்கில் ஆந்திர வங்கி, ஓரியண்டல் வங்கி, அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடெட் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகளின் தகவல்களை இணைத்தவர்கள் தங்கள் வங்கியின் புதிய IFSC குறியீட்டை வங்கியில் இருந்து பெற்றோ அல்லது வலைத்தளங்களில் அறிந்துகொண்டோ EPFO தளத்தில் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய IFSC code உங்களிடம் இருந்தால் அதை புதுப்பிப்பது எப்படி?

  • https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற வலைத்தள முகவரிக்குச் செல்ல வேண்டும். 
  • அங்கு உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை கொடுத்து Login செய்து கொள்ள வேண்டும்.
  • Login ஆனதும் Manage எனும் விருப்பத்தைக் கிளிக் செய்து KYC என்பதை தேர்ந்தெடுக்கவும். 
  • அதில், Bank எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • இப்போது உங்கள் வங்கி கணக்கு எண்ணைச் சரியாக இரண்டு முறை உள்ளிட்டு, அடுத்து புதுப்பிக்கப்பட்ட IFSC குறியீட்டை உள்ளிட வேண்டும்.
  • அடுத்து ஒப்புதல் வழங்க கிளிக் செய்துவிட்டு Save என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அவ்வளவுதான், உங்கள் வங்கி விவரங்கள் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Views: - 1023

0

0