கூகிள் மீட்-ல இந்த Attendance Tracking அம்சம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

7 April 2021, 11:09 am
How To Use Attendance Tracking Feature On Google Meet
Quick Share

சமீபத்திய காலமாக ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் தளங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. கூகிள் மீட், ஜூம், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் என எக்கச்சக்கமான வீடியோ  கான்பரன்சிங் தளங்கள் வந்துவிட்டன. 

அதுபோன்றவற்றில்,  கூகிள் மீட் தற்போது மிக சிறந்த தளங்களில் ஒன்றாக பிரபலமாகியுள்ளது. இந்த ஆன்லைன் கான்பரன்சிங் பயன்பாடுகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் PC என அனைத்து ஸ்மார்ட் சாதனங்களிலுமே வேலைச் செய்கின்றன. 

கூகிள் ஒரு பாதுகாப்பான தளத்தை உருவாக்கியுள்ளது, இது ஆன்லைன் விளக்கக்காட்சிகள் (online presentations), திரை பகிர்வு (screen sharing) மற்றும் பலவற்றிற்கு உதவும் பல அம்சங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு மற்றொரு அம்சத்தையும் கொண்டுள்ளது, இது நிறுவனங்களுக்கும், ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அது என்ன  அம்சம் என்றால் “attendance tracking feature” எனும் வருகை கண்காணிப்பு அம்சம் தான். இந்த அம்சம் ஒரு குழு அழைப்பின்போது மொத்த வருகையை கண்காணிக்க உதவுகிறது. ஆன்லைன் மீட்டிங்கின் போது மாணவர்களை எளிதாகக் கண்காணிக்க இது உதவுவதால் கல்வி நிறுவனங்களுக்கும் கைகொடுக்கும் ஒரு அம்சமாக உள்ளது.

ஆன்லைனில் பல குழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிகழ்வு அல்லது கூட்டத்தின் போது மட்டுமே Google Meet இன் Track Attendance அம்சத்தைப் பயன்படுத்த முடியும். வருகை குறிப்பதற்கான அம்சத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த வழிமுறைகள் உதவியாக இருக்கும்:

கூகிள் மீட் மீட்டிங்கின் போது வருகைப் பதிவைக் குறிப்பது (Attendance) எப்படி?

படி 1: உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஏதேனும் ஒரு இன்டர்நெட் பிரௌசரில் கூகிள் மீட் பயன்பாட்டைத் திறக்கவும் அல்லது நீங்கள் Install செய்திருந்தால் நேரடியாக பயன்பாட்டை  பயன்படுத்தலாம்.

படி 2: ஒரு Event அல்லது Meeting ஐ உருவாக்கவும், நிகழ்வு தொடங்கியதும் மேல்-வலது மூலையில் இருந்து Settings விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

படி 3: இப்போது, ​​நீங்கள் ‘Host Control’ தாவலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 4: மேலே உள்ள படிகளை நீங்கள் முடித்ததும், நீங்கள் ‘Attendance’  கண்காணிப்பு விருப்பத்தைப் பார்க்க முடியும். நடந்துகொண்டிருக்கும் கூட்டத்தின் போது வருகை தரும் பயனர்களின் வருகையைக் குறிக்க இதை இயக்கவும்.

கூகிள் மீட்டில் ஒரு Event அமைக்க நீங்கள் கூகிள் கேலெண்டரைப் பயன்படுத்தலாம் மற்றும் அங்கிருந்து Attendance Tracking அம்சத்தையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

கூகிள் காலெண்டரைப் பயன்படுத்தி கூகிள் Meet பயன்பாட்டில் வருகையை கண்காணிப்பது எப்படி?

படி 1: புதிய கூகிள் மீட் Event ஒன்றை உருவாக்கவும் அல்லது கூகிள் காலெண்டரிலிருந்து ஏற்கனவே ஒரு Meeting இருக்கிறதா என்பதை தேர்ந்தெடுக்கவும்.

படி 2: Window வின் மேல் வலது மூலையில் இருந்து ‘Change Conference’ எனும்  அமைப்பைக் கிளிக் செய்க.

படி 3: இப்போது, ​​’வருகை கண்காணிப்பு’ (Attendance Tracking) விருப்பத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ள செக்மார்க் பெட்டியைக் கிளிக் செய்க.

படி 4:அடுத்து,  Save என்பதைக் கிளிக் செய்க.

அவ்வளவுதான்!

Views: - 2

0

0