ரிலையன்ஸ் ஜியோவின் கேரி-ஃபார்வர்ட் கிரெடிட் லிமிட் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

By: Dhivagar
9 October 2020, 8:31 pm
How To Use Reliance Jio's Carry-Forward Credit Limit Feature
Quick Share

போஸ்ட்பெய்ட் பிரிவில் ரசிகர்களை ஈர்க்க, ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியின் கீழ், நிறுவனம் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கேரி-ஃபார்வர்ட் கிரெடிட் லிமிட் அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த அம்சம், தற்போதுள்ள கேரியரிலிருந்து ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் நெட்வொர்க்கிற்கு மாற்ற அல்லது இடம்பெயர விரும்பும் பயனர்களுக்காக சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. உண்மையில், முந்தைய நெட்வொர்க் ஆபரேட்டரிடமிருந்து வாடிக்கையாளர்கள் பெறும் அதே கடன் வரம்பை ரிலையன்ஸ் ஜியோவும் வழங்கும் என்று இன்று ஜியோ அறிவித்துள்ளது.

இந்த வசதி புதிய பயனர்களுக்கு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸில் சேர உதவும். பயனர்கள் ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. தவிர, நிறுவனம் எந்த பாதுகாப்பு வைப்புத்தொகையும் கேட்கவில்லை. ஆனால் சேவைகளைப் பெற, பயனர்கள் பின்வரும் இந்த மூன்று படிகளைப் பின்பற்ற வேண்டும்.

படி 1: முதலில், பயனர்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து 88-501-88-501 என்ற எண்ணுக்கு Hi என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். (ஏற்கனவே உள்ள உங்கள் போஸ்ட்பெய்ட் எண்ணிலிருந்து, நீங்கள் ஜியோபோஸ்ட்பெய்ட் பிளஸுக்கு செல்ல விரும்பினால்).

படி 2: பின்னர், உங்கள் போஸ்ட்பெய்ட் ரசீதை (postpaid bill) பதிவேற்ற வேண்டும்.

படி 3: அதன் பிறகு, புதிய SIM வாங்க நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ கடைக்குச் செல்ல வேண்டும். இல்லையெனில், நிறுவனம் SIM கார்டை உங்கள் வீட்டிற்கே விநியோகம் செய்யும் வசதியையும் வழங்குகிறது. 

அவ்வளவுதான், SIM வாங்கி பயன்படுத்தும்போது நீங்கள் ஜியோவின் போஸ்ட்பெய்ட் சேவைகளை அணுக அனுமதிக்கப்படுவீர்கள்.

Views: - 48

0

0