வாட்ஸ்அப் வீடியோக்களை ஆடியோ இல்லாமல் அனுப்ப புது அம்சம்! பயன்படுத்துவது எப்படி?

2 March 2021, 12:11 pm
How To Use WhatsApp Mute Video Feature
Quick Share

சமீபத்தில், பீட்டா சோதனைக்காக வாட்ஸ்அப் புதிய மியூட் வீடியோ அம்சத்தை வெளியிட்டது. வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சம் இப்போது அனைத்து ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக, இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் வீடியோ எடிட்டிங் திரையில் கிடைக்கிறது. இந்த அம்சத்தின் மூலம், வீடியோக்களில் இருந்து தேவையற்ற கீச்சல் ஒலிகளைத் தவிர்க்க முடியும்.

இப்போதைக்கு, வாட்ஸ்அப்பின் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கிறது. iOS பயனர்களுக்கு இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

மியூட் வீடியோ அம்சம் பயனர்களை ஒரு வீடியோவை தங்கள் தொடர்புகளுக்கு அனுப்புவதற்கு முன்பு மியூட் செய்ய அனுமதிக்கிறது. இந்த வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப்பில் புதிய மியூட் வீடியோ அம்சத்தை வீடியோ எடிட்டிங் திரையில் காணலாம். Volume ஐகான் search bar இன் கீழ் பாப்-அப் ஆகும், அதைக் கிளிக் செய்தால் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவை மியூட் ஆகும். 

பீட்டா அப்டேட்டின் ஒரு பகுதியாக நீங்கள் இந்த அம்சத்தைப் பெற்றிருந்தால், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

படி 1: முதலில், கூகிள் பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப்பைத் திறந்து, சமீபத்திய பீட்டா பதிப்பைப் பெற பயன்பாட்டை அப்டேட் செய்ய வேண்டும்.

படி 2: இப்போது, ​​உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைத் திறக்கவும்.

படி 3: தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் ஸ்டேட்டஸ்-களுக்கு வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சம் கிடைக்கிறது. சாட் விண்டோ அல்லது ஸ்டேட்டஸில் வீடியோவைப் பதிவுசெய்க.

படி 4: வீடியோவைப் பதிவுசெய்த பிறகு, மேல் இடது மூலையில் ஒரு Volume ஐகானைக் காண்பீர்கள். Mute Video பட்டனைக் கிளிக் செய்யவும். அவ்வளவுதான், நீங்கள் ஆடியோ இல்லாத வீடியோவை இப்போது அனுப்பலாம்.

Views: - 7

0

0