ஆன்லைன் கல்வி கற்க டேட்டா போதவில்லையா? இதை மட்டும் செய்தால் டேட்டாவும் தீராது.. பணமும் வீணாகாது!

8 September 2020, 10:54 am
how you can reduce data usage on WhatsApp
Quick Share

கொரோனா வைரஸ் பரவலினால் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக, பெரும்பான்மையான மக்கள் வீட்டுகளிலிருந்தே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் பள்ளி மாணவர்களும் வீட்டிலிருந்தே ஆன்லைன் வழியாக தான் கல்வி கற்க வேண்டியிருக்கிறது.

அதுவும், இந்த பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள், PDF வடிவிலான புத்தகங்கள் என அனைத்துமே வாட்ஸ்அப் வழியாக தான் அவர்கள் ஆசிரியர்கள் அனுப்புகிறார்கள். இதனால், தினமும் 1 GB 1.5 GB  டேட்டா பேக் எல்லாம் வாட்ஸ்அப் மூலம் கட கடவென குறைந்து விடுகிறது. இதனால், உடனேயே குழ்ந்தைகள் பெற்றோர்களிடம் டேட்டா பேக் போட்டது போதவில்லை. இன்னும் அதிக விலைக்கு ரீசார்ஜ் செய்துகொடுங்கள் என்று கேட்கிறார்கள். அதிக விலைக்கு ரீசார்ஜ் எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அனைத்து File களையும் டவுன்லோட் செய்யும் அமைப்பை மாற்றி உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் டவுன்லோட் செய்தாலே உங்கள் டேட்டாவும் பணமும் வீணாகாமல் இருக்கும். அது  எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.  

வாட்ஸ்அப்பில் தரவு பயன்பாட்டைக் குறைக்க சில வழிகள் இங்கே:

Auto-Download அமைப்பை ஆஃப் செய்வது எப்படி?

நீங்கள் Android சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால்,

  • வாட்ஸ்அப்பைத் திறந்து Settings க்கு செல்லவும்
  • Data Usage என்பதை தேர்வுசெய்து ‘மொபைல் தரவைப் பயன்படுத்தும் போது’ அதாவது When using mobile data என்பதைத் தேர்வு செய்யவும். மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி தானாக டவுன்லோட் ஆகும் விருப்பத்துடன் இருக்கும் அனைத்தையும் De-select செய்யுங்கள்.
  • WiFi உடன் இணைக்கப்படும்போது மீடியா தானாக பதிவிறக்குவதை ஆஃப் செய்யவும் இதே போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
  • நீங்கள் iOS சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் இதே போன்று வாட்ஸ்அப் Settingsஐ மாற்றவும்.

உங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து File களையும் தேவையின்றி டவுன்லோட் செய்வதற்குப் பதிலாக இதுபோன்று Settings மாற்றியமைத்து தேவையானவற்றை மட்டும் டவுன்லோட் செய்து டேட்டாவையும் பணத்தையும் சேமித்திடுங்கள்.

இதனுடன் கூடுதலாக வாட்ஸ்அப் அழைப்பைப் பயன்படுத்தும் போது அதிக டேட்டா பயன்பாட்டைக் குறைக்க, ‘Call Settings’ பிரிவின் கீழ் இருக்கும் ‘low data usage’ என்பதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.

இன்னும், உங்கள் மொபைல் டேட்டா அதிகமாக செலவாகிக் கொண்டிருந்தால் WhatsApp settings என்பதற்கு  செல்லுங்கள் அடுத்து Chats என்ற விருப்பத்தை தேர்வு செய்து Chat backup என்பதை தேர்வு செய்யுங்கள். இப்போது auto-backup ஆப்ஷனை ஆஃப் செய்து விடுங்கள். உங்களுக்கு வேண்டும் எனும் போது மட்டும் பேக்அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இவற்றையெல்லாம், நீங்கள் முறையாக பின்பற்றினாலே உங்கள் மொபைல் டேட்டா தேவையின்றி வீணாகாது. உங்கள் பணமும் சேமிக்கப்படும். 

Views: - 0

0

0