ரூ.80,000 மதிப்பில் HP பெவிலியன் ஏரோ 13 லேப்டாப் அறிமுகம் | முழு விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
7 August 2021, 9:55 am
HP Pavilion Aero 13 laptop launched
Quick Share

HP நிறுவனம் HP பெவிலியன் ஏரோ 13 என்ற புதிய லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு HP நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த லேப்டாப் கடந்த ஜூன் மாதம் மிகவும் இலகுரக நுகர்வோர் லேப்டாப் ஆக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது LCD டிஸ்ப்ளே, AMD ரைசன் செயலிகள் மற்றும் 10.5 மணிநேர பேட்டரி லைஃப் ஆகியவற்றை வழங்குகிறது.

HP பெவிலியன் ஏரோ 13 லேப்டாப், நுகர்வோர் பயன்படுத்திய மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் கடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது மெக்னீசியம் அலுமினிய சேசிஸ் மற்றும் மெல்லிய பெசலைக் கொண்டுள்ளது.

இந்த லேப்டாப் 970 கிராம் எடை கொண்டது மற்றும் 13.3 அங்குல முழு HD+ (1920×1200 பிக்சல்கள்) IPS திரையுடன் 16:10 விகிதம், 400-நிட்ஸ் பிரகாசம், ஆன்டி-கிளேர் கோட்டிங் மற்றும் 100% sRGB ஆதரவு ஆகியவற்றைக் கொண்டது.

இது செராமிக் ஒயிட், வெளிர் ரோஸ் கோல்டு மற்றும் இயற்கை வெள்ளி நிறங்களில் வழங்கப்படுகிறது.

HP பெவிலியன் ஏரோ 13 AMD ரைசன் 5 5600U அல்லது ரைசன் 7 5800U செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது, இது AMD ரேடியான் கிராபிக்ஸ், 16 ஜிபி RAM மற்றும் 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப் விண்டோஸ் 10 இல் இயங்குகிறது (விண்டோஸ் 11 க்கு மேம்படுத்த முடியும்) மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 45Wh பேட்டரியை பேக் செய்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 10.5 மணி நேரம் வரை நீடித்து இயங்கும் என்று கூறப்படுகிறது.

HP பெவிலியன் ஏரோ 13 லேப்டாப்பில் உள்ள I/O போர்ட்களில் இரண்டு சூப்பர்ஸ்பீட் யூஎஸ்பி டைப்-A போர்ட்கள், சூப்பர்ஸ்பீட் யூஎஸ்பி டைப்-C போர்ட், HDMI 2.0 ஸ்லாட் மற்றும் மைக்ரோஃபோன்/ஹெட்போன் காம்போ ஜாக் ஆகியவை அடங்கும்.

வயர்லெஸ் இணைப்பிற்கு, இது வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.2 க்கான ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளது.

மடிக்கணினியில் 720p HD வெப்கேம் மற்றும் இரட்டை வரிசை மைக்ரோஃபோன்களும் பொருத்தப்பட்டுள்ளன.

HP பெவிலியன் ஏரோ 13 விலை AMD ரைசன் 5 5600U மாடலுக்கு ரூ.79,999 ஆகவும், அதேசமயம் AMD ரைசன் 7 5800U மாடலுக்கு ரூ.94,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது HP இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் HP வேர்ல்டு ஆஃப்லைன் கடைகள் வழியாகவும் வாங்குவதற்கு கிடைக்கும்.

Views: - 627

0

0