ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தியைத் தொடங்கியது ஹெச்பி நிறுவனம்..! மேக் இன் இந்தியாவிற்கு வலு சேர்க்கும் முயற்சி..!

6 August 2020, 4:51 pm
HP_India_UpdateNews360
Quick Share

மேக் இன் இந்தியா முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, ஹெச்பி தொழில்நுட்ப நிறுவனம், சென்னையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஃப்ளெக்ஸ் மையத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது.

தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்ய, தொழிற்சாலையின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்து, இந்த ஆலை டெஸ்க்டாப் கணினிகளைத் தயாரிபதில் கவனம் செலுத்துகிறது என்றுஹெச்பி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேவைக்கேற்ப உற்பத்தி திறன்களை அதிகரிக்கும் வசதி இந்த ஆலையில் இருக்கும் என ஹெச்பி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

“இந்த புதிய ஆலை தொடக்கத்துடன், இந்தியா மீதான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதும், உள்ளூர் உற்பத்தி அமைப்பின் வளர்ச்சியை ஆதரிப்பதும் எங்கள் நோக்கமாகும்” என்று ஹெச்பி இந்தியா சந்தையின் நிர்வாக இயக்குனர் கேதன் படேல் கூறினார்.

“இந்தியாவில் டெஸ்க்டாப்புகள் மற்றும் ஒர்க் ஸ்டேஷனைகளை தயாரிப்பதற்கு ஹெச்பியுடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் ஹெச்பி தனது வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று ஃப்ளெக்ஸில் உள்ள இந்தியா ஆபரேஷன்களின் மூத்த துணைத் தலைவர் ரிச்சர்ட் ஹாப்கின்ஸ் கூறினார்.

ஹெச்பி இந்தியாவில் வளர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியை பதிவு செய்கிறது. ஐடிசி அறிக்கையின் படி, கிட்டத்தட்ட ஒவ்வொரு மூன்றாவது பிசி மற்றும் இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு இரண்டாவது பிரிண்டரும் ஹெச்பிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் பெங்களூரில் ஒரு பிரிண்டர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும், 2006 முதல் உத்தரகண்ட் மாநிலம் பன்ட்நகரில் ஒரு உற்பத்தி ஆலையையும் கொண்டுள்ளது.

இது 600 பிரத்தியேக ஹெச்பி வேர்ல்ட் கடைகளையும், நாட்டில் 10,000 மறுவிற்பனையாளர்களையும் கொண்ட வலுவான வலையமைப்பையும் கொண்டுள்ளது.

தொழில் வட்டாரங்களின்படி, ஹெச்பி இந்தியா இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

Views: - 15

0

0