இந்தியாவின் 5ஜி சோதனைகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு | முழு விவரம் அறிக

15 August 2020, 11:37 am
Huawei and ZTE Will Not be Allowed to Participate in India’s 5G Trials
Quick Share

எல்லையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்களுக்குப் பிறகு, சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களான ஹவாய் மற்றும் ZTE ஆகியவை இந்தியாவின் 5ஜி சோதனைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படாது. இந்தியா எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு சிக்கல்களை எடுத்துரைக்கும் புதிதாக திருத்தப்பட்ட முதலீட்டு விதிகளை இந்திய அரசு அமல்படுத்தும்.

5 ஜி சோதனைகளுக்காக இந்தியா தனது செயல்முறையை மறுதொடக்கம் செய்யும் நேரத்தில் இந்த முக்கியமான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 ஜி உள்கட்டமைப்பை அமைப்பதற்கான உபகரணங்களை வழங்க இந்தியா முன்னர் ஹவாய் நிறுவனத்தை அனுமதித்திருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கால் இந்த செயல்முறையில் முன்னேற்றமில்லை.

இதற்கான இறுதிக்கட்ட முடிவைப் பொறுத்தவரை, பிரதமரின் அலுவலகத்தின் ஒப்புதலின் அடிப்படையில் ஓரிரு வாரத்தில் முறையான முடிவு எடுக்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹூவாய் போன்ற சீன ஜாம்பவான்களை தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு நாட்டிற்கு பல சிக்கலை ஏற்படுத்தக்கூடும். சிட்னியைச் சேர்ந்த ஆய்வாளர் நிகில் பாத்ராவின் கூற்றுப்படி, “இந்திய சந்தை ஏற்கனவே உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. பிணைய உபகரண சந்தை சிறியது தான்.  ஆனாலும் இந்தியா பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்திய தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் தங்களது தற்போதைய 4 ஜி நெட்வொர்க்குகளிலிருந்தும் லாபத்தை ஈட்ட சிரமப்படுவதாக கூறப்படும் பக்கமும் குறிப்பிடத்தக்கது. SBICAP செக்யூரிட்டிஸ் ஆராய்ச்சித் தலைவர் ராஜீவ் ஷர்மாவின் கூற்றுப்படி, ஹவாய் மற்றும் ZTE மீதான தடை 5 ஜிக்கு மாறுவதற்கான செலவை சுமார் 35% அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படிக்கலாமே: மீடியா டெக் மடிக்கணினிகளுக்கான T700 5G மோடம் வெளியானது |MediaTek T700 5G Modem| மேலும் பல முக்கிய தகவல்கள்(Opens in a new browser tab)

Views: - 34

0

0