ஆளே இல்லாமல் ஓடும் சைக்கிளை பார்த்து இருக்கீங்களா?! ஹவாய் இன்ஜினியரின் செம கண்டுபிடிப்பு | Self Balancing/ driving Bicycle

12 July 2021, 9:04 am
self-driving bicycle developed by huawei engineers can operate unmanned
Quick Share

பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகும் இந்நேரத்தில் சைக்கிள் ஒரு முக்கியமான மாற்று தேர்வாக பலருக்கும் இருந்து வருகிறது. சைக்கிள் வாங்கும்போது எல்லாம் பக்காவாக இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்குவோம். ஆனால், சைக்கிளை வாங்கினால் மிதித்துக் கொண்டு போவதற்குள் வியர்த்து போய் சலித்து விடும். உடற்பயிற்சிக்காக வாங்குபவர்களுக்கு சாதாரண சைக்கிள் ஓகே தான். ஆனால் பணிக்குச் செல்ல, வேறு ஏதேனும் பயன்பாட்டுக்கு வாங்குபவர்களுக்காகவே ஹவாய் நிறுவன இன்ஜினியர் ஒரு புதிய சைக்கிளை உருவாக்கியுள்ளார். 

தன்னாட்சி இயக்கம் (Autonomous driving) எனும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதால், அதை மேலும் ஒரு பயன்பாட்டு தயாரிப்பில் பயன்படுத்தி ஹவாய் பொறியாளர்கள் இப்போது செல்ஃப் டிரைவிங் மிதிவண்டியை உருவாக்கியுள்ளனர், இது ஆளே இல்லாமல் இயங்க முடியும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் சாலைகளில் சமநிலையுடன் செல்ல முடியும். இதன் தன்னாட்சி இயக்கத்தை செயல்படுத்த மிக துல்லியமான சென்சார்கள், பட அங்கீகாரம் கேமராக்கள் மற்றும் AI தொழில்நுட்பம் போன்ற சுவாரஸ்யமான அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

இந்த முயற்சியில் ஈடுபட்ட ஹவாய் பொறியாளர்களில் ஒருவரான zhihui jun, அவர்களுக்கு சைக்கிள் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டதன் காரணமாகவே இந்த திட்டத்திற்கான யோசனை கிடைத்துள்ளது. 

முதல் கட்டமாக, டெவலப்பர்கள் CAD சாஃப்ட்வேரில் ஒரு மெய்நிகர் பைக்கை மாடலிங் செய்யத் தொடங்கினர், அதே நேரத்தில் தானியங்கி இயக்கத்துக்கு தேவையான அம்சங்களையும் சேர்த்தனர். இதில் இரண்டு பெரிய பிரஷ்லெஸ் மோட்டார்கள் மற்றும் ஒரு ஸ்டீயரிங் கியர், ஒரு RGBD டெப்த் கேமரா, ஆக்சலரோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் ஒரு LiDAR சென்சார் ஆகிய அம்சங்களைச் சேர்த்தனர். இந்த பைக் சுமார் 2-3 மணி நேரம் நீடித்து இயங்கும் 6S மாடல் ஏர்பிளேன் பவர் லித்தியம் பேட்டரியைப் பயன்படுத்துகிறது, மேலும் பிரதான கட்டுப்பாட்டு கணினி அமைப்பு இருக்கைக்கு கீழேயும், பின்புற சக்கரத்திற்கு மேலேயும் வைக்கப்பட்டுள்ளது.

ஹவாய் நிறுவனத்தின் ascend 310 ஐ AI செயலியாகவும், நிறுவனத்தின் பயன்பாட்டு ஆர்கெஸ்ட்ரேஷன் சேவையையும் பயன்படுத்தி பைக்கின் கம்ப்யூட்டிங் யூனிட்டை ZHIhui jun உருவாக்கினார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் ரோபோ அம்சங்களைப் பயன்படுத்துவதால், பைக் தானாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கொண்டது.  இந்த சைக்கிளுடன் சோதனை முயற்சிகளை செய்தும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர் ஹவாய் இன்ஜினியர்கள். எதிர்காலத்தில் இது மிகவும் பயனுள்ள தயாரிப்பாக சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Views: - 157

0

0