ஹுவாயின் மிகப்பெரிய 98 இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் | Huawei V98 | விலை & விவரங்கள்

Author: Dhivagar
2 August 2021, 8:54 am
Huawei launches its largest V-series 98-inch Smart Screen TV
Quick Share

ஹுவாய் தனது V-தொடர் டிவிகள் பிரிவில், சமீபத்திய 98 அங்குல ஸ்மார்ட் ஸ்கிரீன் டிவியை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. CNY 29,999 (தோராயமாக ரூ.3.45 லட்சம்) விலையிலான இந்த டிவி தான் இதுவரை நிறுவனம் அறிமுகம் செய்ததிலேயே மிகப்பெரிய ஸ்மார்ட் டிவி ஆகும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த V98 டிவி 120Hz 4K LCD டிஸ்பிளே, 24MP AI வெப்கேம், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் HarmonyOS 2 ஆதரவுடன் வருகிறது.

அல்ட்ரா-HD 4K டிஸ்பிளே

  • ஹுவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் V98 ஒரு மெல்லிய பிரேம் உடன் பாப்-அப் ஆகும் 24 MP அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டுள்ளது, இது 30 fps இல் முழு HD வீடியோ அழைப்பை ஆதரிக்கும் திறன் கொண்டது.
  • தொலைக்காட்சி 98-இன்ச் அல்ட்ரா-HD 4K (3840×2160 பிக்சல்கள்) AG ஆன்டி-கிளார் LCD திரையை 16:9 என்ற திரை விகிதத்துடன், 120 Hz புதுப்பிப்பு வீதம், DCI-P3 வண்ண வரம்பு மற்றும் 450-நிட்ஸ் பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இது ஒரு டைரக்ட்-டைப் மேட்ரிக்ஸ் பகிர்வு பின்னொளி அமைப்பைக் கொண்டுள்ளது.

RAM & ஸ்டோரேஜ்

  • ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் V98 ஆக்டா கோர் ஹோங்கு 818 செயலி உடன் இயக்கப்படுகிறது, இதில் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை இடம்பெறுகிறது.
  • இது ஹார்மோனிOS 2 உடன் இயங்குகிறது, இது மற்ற ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளுடன் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கிறது, மூன்று நபர்களின் உடற்பயிற்சி தரவுகள் மற்றும் AI செயல்பாடுகள், கேம்கள் மற்றும் ஆடியோ/வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.
  • தொலைக்காட்சி இணைப்புக்காக டூயல்-பேன்ட் வைஃபை வசதியை ஆதரிக்கிறது.

Huawei Sound சவுண்டு இன்ஜின்

  • Huawei ஸ்மார்ட் ஸ்கிரீன் V98 இரண்டு முழு அதிர்வெண் மற்றும் இரண்டு உயர் அதிர்வெண் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
  • அதோடு DTS மற்றும் டால்பி டூயல் டீகோடிங் வசதிக்கான ஆதரவையும் கொண்டுள்ளது மற்றும் மெய்நிகர் சவுண்டு ஃபீல்டு விரிவாக்கம், குரல் மேம்பாடு, டைனமிக் லவுட்னஸ் எக்ஸ்பேன்ஷன் மற்றும் ஒலி அளவுத்திருத்தம் போன்ற செயல்பாடுகளை வழங்குகிறது.
  • இது பல வீடியோ அழைப்புகள், கேஸ்ட் ஸ்கிரீன், ஸ்ப்ளிட் ஸ்கிரீன், ஒன்-டச் ப்ரொஜெக்ஷன் மற்றும் குரல் கட்டுப்பாடு போன்ற அம்சங்களுடன் வருகிறது.

விலை & விற்பனை

ஹுவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் V98 டிவியின் விலை சீனாவில் CNY 29,999 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.45 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி ஏற்கனவே சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது மற்றும் ஆகஸ்ட் 12 முதல் விற்பனைக்கு வரும்.

Views: - 229

0

0