5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு காப்புரிமை பெற்றது ஹவாய்

13 September 2020, 9:10 pm
Huawei patents smartphone with 5 rear cameras
Quick Share

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஹவாய் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கு காப்புரிமை பெற்றுள்ளது, இதில் பின்புறத்தில் ஐந்து கேமரா அமைக்கப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் திரையில் கீழ் செல்பி ஷூட்டர் இடம்பெற்றுள்ளது. CNIPA (China National Intellectual Property Administration – சீனா தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகம்) உடன் வடிவமைப்பு காப்புரிமைகளுக்காக ஹவாய் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக லெட்ஸ் கோ டிஜிட்டல் அறிக்கை தெரிவித்துள்ளது. காப்புரிமையில் 24 தயாரிப்பு ஓவியங்களும் உள்ளன.

ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் மிகவும் எதிர்கால தன்மையைக் கொண்டது. இடதுபுறத்தில் வடிவமைப்பின் அடிப்படையில், சாதனம் முந்தைய மாடல்களைப் போலவே இருந்தது, அதே சமயம் வலதுபுறம் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பொத்தானைக் கொண்டுள்ளது. கீழே ஒரு யூ.எஸ்.பி டைப்-C சார்ஜிங் போர்ட் உள்ளது அதனுடன் ஒரு ஸ்பீக்கர் கிரில், மேலே 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் மைக்ரோஃபோன் உள்ளது.

சமீபத்தில், அனைத்து திரை கைரேகை திறத்தல் தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்களுக்கான காப்புரிமையையும் ஹவாய் தாக்கல் செய்திருந்தது. புதிய முழுத்திரை கைரேகை தொழில்நுட்பம் தொலைபேசியைத் திறக்க வேண்டிய அவசியமின்றி உரைச் செய்திகளுக்கு பதிலளிக்க பயனர்களை அனுமதிக்கும் என்று நிறுவனம் வெளிப்படுத்தியது. 

இந்த நுட்பங்கள் குறித்த கூடுதல் அப்டேட்டுகளுக்கு Updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 5

0

0