குழந்தைகளுக்காக ஒரு மினி மின்சார வாகனம்! ஹூண்டாயின் செம கியூட் கார்!

9 November 2020, 11:58 am
Hyundai Made a Mini EV for Kids & It’s the Cutest Thing You Will See Today
Quick Share

எதிர்கால பறக்கும்-டாக்ஸி திட்டங்களைத் தவிர, ஹூண்டாய் மின்சார வாகன பிரிவிலும் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. இப்போது, ​​நிறுவனம் குழந்தைகளுக்கான மின்சார வாகனத்தையும் உருவாக்கியுள்ளது. இக்கால குழந்தைகள் எதிர்கால தொழில்நுட்பங்களை அனுபவிப்பதற்காக ஒரு புதிய “பொம்மை” மின்சார வாகனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஹூண்டாய், தனது சமீபத்திய மினி-EV தான் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே “மிகச்சிறிய மின்சார வாகனம்” என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த மினி மின்சார காருக்கு பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. இது 2019 ஆம் ஆண்டில் ஹூண்டாய் காட்சிப்படுத்திய “EV கான்செப்ட் 45” என அழைக்கப்படும் ஒரு கான்செப்ட் காரின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

இந்த குட்டி காரின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி பார்க்க வேண்டுமேயெனில், இந்த கார் இரண்டு DC மோட்டார்கள் உடன் வருகிறது, இது 4.3 மைல் அதாவது தோராயமாக 7 கிமீ தூரத்தை அடைய போதுமான ஆற்றலை வழங்குகிறது. ஒரே ஒரு இருக்கை மட்டுமே உள்ளது, இது இந்த பொம்மை மின்சார வாகனத்துக்கு பொதுவானது மற்றும் காரின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உண்மையான மின்சாரவாகனத்தைப் போன்ற உணர்வைக் குழந்தைகளுக்கு வழங்க, ஹூண்டாய் ஒரு சில கேமராக்கள் மற்றும் சென்சார்களை வாகனத்தின் முன் டாஷ்போர்டில் ஒருங்கிணைத்துள்ளது. 

எமோஷன் அடாப்டிவ் வாகனக் கட்டுப்பாடு என அழைக்கப்படும் EAVC அமைப்பு, ட்ரைவர் ஃபேசிங் கேமராவைப் பயன்படுத்தி ஓட்டுநரின் முகபாவனைகளைப் படம்பிடித்து, அதற்கேற்ப இசையையும் விளக்குகளையும் சரிசெய்யவும் செய்கிறது.

மேலும், இந்த குட்டி மின்சார வாகனம் சில அறியப்படாத காரணங்களுக்காக, ஓட்டுனரின் இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதத்தை அளவிட தேவையான சென்சார்களுடனும் வருகிறது.

இப்போதெல்லாம், ​​இந்த வகையான மினி மின்சார வாகனங்கள் எல்லாம் ஒரு புதிய விஷயம் அல்ல. ஏனென்றால், பிரபலமான ஹைப்பர் கார் தயாரிப்பாளர்களான புகாட்டி ஏற்கனேவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மினி மின்சார வாகனத்தையும் டெஸ்லா ஏற்கனவே அதன் மாடல் S இன் மினியேச்சர் பதிப்பையும் குழந்தைகளுக்காக விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0