பொதுமக்கள் கவனத்திற்கு: இந்த பொதுத்துறை வங்கிகளின் IFSC குறியீடுகள் ஏப்ரல் 1 முதல் மாற்றம்!

31 March 2021, 6:44 pm
IFSC Codes Of These PSU Banks To Change From April
Quick Share

ஏப்ரல் 1, 2021 முதல் புதிய நிதியாண்டு 2022 தொடங்குவதால், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், சிண்டிகேட் வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திர வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவற்றின் IFSC குறியீடுகள் மாறப்போகின்றன. 

எனவே இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் புதிய IFSC குறியீடுகளையே குறிப்பிட வேண்டும், அப்போதுதான் உங்கள் பரிவர்த்தனைகள் தோல்வியடையாமல் சீராக செயல்படுத்தப்படும்.

2019 ஆம் ஆண்டில், நிதியமைச்சர் சீதாராமன் 10 பொதுத்துறை வங்கிகளை 4 மிகப்பெரிய வங்கிகளுடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்தார். இந்த இணைப்பு ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வந்தது. இப்போது புதிய நிதியாண்டில் இருந்து, ஒன்றிணைக்கப்பட்ட வங்கிகளின் IFSC குறியீடுகள் மற்றும் MICR செயல்படாதவையாக மாறும், அதற்கு பதிலாக பெரிய பொதுத்துறை வங்கியின் குறியீடுகள் அதற்கானதாகவும் மாறும்.

புதிய IFSC மற்றும் MICR குறியீடுகள் அமலுக்கு வரும் தேதிகள்:

PNBஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்ஏப்ரல் 1, 2021
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாஏப்ரல் 1, 2021
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாஆந்திரா வங்கிஏப்ரல் 1, 2021
கார்ப்பரேஷன் பேங்க்  ஏப்ரல் 1, 2021
இந்தியன் வங்கிஅலகாபாத் வங்கிமே 1, 2021
கனரா வங்கி சிண்டிகேட் வங்கிஜூலை 1, 2021
பேங்க் ஆஃப் பரோடா விஜயா வங்கி, தேனா வங்கிமார்ச் 1, 2021

IFSC குறியீட்டில் மாற்றங்கள் தொடர்பான தரவுகள் தனிப்பட்ட வங்கியின் இணையதளத்தில் கிடைக்கிறது. முந்தைய விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியின் IFSC குறியீடுகள் மார்ச் 1, 2021 அன்றே மாற்றப்பட்டதாக அதன் தளத்தில் பேங்க் ஆஃப் பரோடா (BOB) தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் புதிய MICR குறியீட்டைக் கொண்ட காசோலை புத்தகங்களுக்கு மார்ச் 31, 2021 க்குள் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

IFSC குறியீடு மற்றும் MICR குறியீட்டின் முக்கியத்துவம்:

IFSC என்பது இந்திய நிதி அமைப்புக் குறியீட்டைக் (Indian Financial System Code) குறிக்கிறது மற்றும் NEFT, RTGS உள்ளிட்ட பல்வேறு பரிமாற்ற முறைகள் வழியாக ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் பரிமாற்றங்கள் செய்ய இவை உதவுகிறது. மேலும் MICR அல்லது காந்த மை எழுத்து அங்கீகாரம் (Magnetic Ink Character Recognition) எனும் ஒன்பது இலக்க குறியீடு காசோலைகள் மூலம் வேகமாக பணம் பெற உதவுகிறது.

Views: - 0

0

0