இந்தியாவில் உள்ளூர் விமானங்கள் மீண்டும் இயக்கம்…. டிக்கெட்டை பதிவு செய்வது எப்படி???

22 May 2020, 4:44 pm
India domestic flights resume: How to book plane tickets online during lockdown 4.0
Quick Share

இந்தியாவில் COVID-19 தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தப்பட்டு வைத்திருந்த விமானங்கள் இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்ளூர் விமானங்கள் மட்டும் மே 25, 2020 முதல் தொடங்க உள்ளது. விமானத் துறை இதற்கான விதிமுறைகளை வியாழக்கிழமை அன்று வெளியிட்டது. விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் அனைவரும் கட்டாயமாக தங்கள் போனில் ஆரோக்கியா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். மேலும் முக கவசம் அணிவது கட்டாயம். மேலும் நுழைவு வாயிலில் நுழையும் முன்பாக தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் பயணத்திற்கான பயணச்சீட்டை ஆன்லைன் சேவைகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அதனை எப்படி பதிவு செய்வது என இப்போது பார்க்கலாம்.

1. பேடிஎம் (Paytm):

விமான டிக்கெட்டை நீங்கள் பேடிஎம் இணையதளம் அல்லது செயலி மூலமாக புக் செய்யலாம். புக்கிங் சர்வீசஸிற்கு கீழே இருக்கும் “Flights” பட்டனை கிளிக் செய்யுங்கள். பேருந்து அல்லது இரயிலிலை கிளிக் செய்திருந்தால் கூட சுலபமாக பிலைட் டேபிற்கு வந்து விடலாம். டிக்கெட்டை புக் செய்ய நீங்கள் எங்கிருந்து செல்ல வேண்டும், நீங்கள் செல்ல இருக்கும் இடம் மற்றும் அந்த ஏர்போர்ட்டின் கோடு, பயணம் செய்ய இருக்கும் நாள் ஆகியவற்றை என்டர் செய்யுங்கள். இப்போது எத்தனை நபர்கள் பயணம் செய்ய உள்ளீர்கள் என்பதையும், பயண வகுப்பையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். 

நீங்கள் திரும்பி வர இருந்தால் அதற்கான தேதியையும் குறிப்பிடுங்கள். “சர்ச்” ஆப்ஷனை கிளிக் செய்யும் போது உங்களுக்கு இருக்கும் விமானங்களை காட்டும். அதில் ஒரு விமானத்தை தேர்வு செய்து, பயணியின் விவரங்கள், எந்த இருக்கையில் பயணிக்க விரும்புகிறீர்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கன்டினியூவை கிளிக் செய்யுங்கள். இப்போது கட்டணத்தை செலுத்தி விட்டால் டிக்கெட் புக் ஆகி விடும்.

2. மேக் மை டிரிப் (Make My Trip):

டிக்கெட்டை புக் செய்வது அனைத்து தளத்திலுமே கிட்டத்தட்ட ஒன்று தான். Flights யை தேர்வு செய்து, எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற இடங்கள், பயண தேதி, பயணிகளின்  எண்ணிக்கை மற்றும் வகுப்பை தேர்ந்தெடுங்கள். இப்போது வரும் விமான பட்டியலில் இருந்து ஒரு விமானத்தை தேர்வு செய்து பயணிகளின் விவரங்களை என்டர் செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.

3. கோஐபிஐபிஓ (Goibibo):

பேடிஎம் மற்றும் மேக் மை டிரிப் போலவே “Flights” ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, எங்கிருந்து எங்கு செல்ல நினைக்கிறீர்கள், பயணத்திற்கான தேதி, பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வகுப்பை தேர்ந்தெடுங்கள். கட்டணம் மற்றும் நேரத்திற்கு தகுந்தாற்போல் ஒரு விமானத்தை தேர்ந்தெடுத்து பயணி குறித்த தகவல்களை என்டர் செய்து கட்டணத்தை செலுத்துங்கள்.

4. யாத்ரா (Yatra):

யாத்ராவில் விமானத்தை தேடுவதற்கு முதலில் நீங்கள் எந்த இடத்தில் இருந்து எங்கு செல்ல வேண்டும், என்றைக்கு செல்ல வேண்டும், பயணிகளின் எண்ணிக்கை, வகுப்பு ஆகியவை கொடுக்க வேண்டும். நீங்கள் பயணிக்க நினைக்கும் விமானத்தை தேர்ந்தெடுத்து பயணிகளின் விவரங்களை பூர்த்தி செய்து கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை புக் செய்யுங்கள்.

5. ஐஎக்ஸ்ஐகோ (Ixigo):

ஐஎக்ஸ்ஐகோ வின் இணையதளம் அல்லது செயலி மூலமாக நீங்கள் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் ஆகிய இடங்கள், பயணம் செய்ய போகும் தேதி, எத்தனை நபர்கள் பயணிக்க உள்ளீர்கள், வகுப்பு ஆகியவற்றை தேர்வு செய்யவும். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் ஒரு விமானத்தை தேர்ந்தெடுத்து பயணிகளின் விவரங்களை என்டர் செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

Leave a Reply