BharatCaller வந்த பிறகும் இன்னுமா Truecaller வச்சிருக்கீங்க?

Author: Hemalatha Ramkumar
29 August 2021, 8:26 am
India launches ‘BharatCaller’, an equivalent of TrueCaller. Details here
Quick Share

இந்தியாவில் பெரும்பாலானோர் யாரிடம் இருந்து அழைப்பு வருகிறது என்பதை Caller ID மூலம் அறிந்து கொள்ளவும், தேவையில்லாத தொடர்புகளை Block செய்யவும் இன்னல் வரையில் TrueCaller ஐ தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இனிமேல் அதற்கான அவசியம் இல்லை.

இந்தியா அதன் சொந்த Caller ID கண்காணிப்பு பயன்பாடான BharatCaller ஐ ட்ரூ காலருக்கு இணையாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் என்றும், குறிப்பிட்ட சில அம்சங்களில் TrueCaller ஐ விட மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருப்பதாகவும் இந்த ஆப் உருவாக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

BhararCaller ஆப் ஆனது 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர் தரவுத்தளங்களையும், உலக சமூகத்திலிருந்து 1 பில்லியனுக்கும் அதிகமான எண்களின் தரவையும் கொண்டுள்ளது. 

உங்கள் தகவல்தொடர்புகளைப் அறிவார்ந்த முறையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள BharatCaller ஆப் தான் சரியான தேர்வு என பிளேஸ்டோரில் பயன்பாட்டிற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Truecaller க்கு போட்டியான BharatCaller பயன்பாட்டை பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) முன்னாள் மாணவர் பிரஜ்வால் சின்ஹா உருவாக்கியுள்ளார். இதன் இணை நிறுவனராக குணால் பாஸ்ரிச்சா பணியாற்றியுள்ளார். சின்ஹா ​​மற்றும் பஸ்ரிச்சா இருவரும் National Startup Award 2020 போட்டியில் விருதை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த BharatCaller ஆப் பிளேஸ்டோர் மற்றும் iOS இல் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் இது வரை 6,000 பதிவிறக்கங்களை கொண்டுள்ளது.

BharatCaller இன் அம்சங்கள்

  • BharatCaller அதன் சேவையகத்தில் பயனர்களின் தொடர்புகள் மற்றும் அழைப்பு பதிவுகளைச் சேமிக்காது மற்றும் இதனால் பயனர்களின் தனியுரிமை பாதிக்கப்படாது.
  • மேலும், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பயனர்களின் தொலைபேசி எண்களின் தரவுத்தளம் மற்றும் அத்தகைய தரவுகளுக்கான அணுகல் கிடையாது.
  • BharatCaller இன் எல்லா தரவும் மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் சேமிக்கப்படும் மற்றும் இந்தியாவிற்கு வெளியே அதன் சேவையகத்தை யாரும் பயன்படுத்த முடியாது. 
  • ஆங்கிலம் தவிர, இந்தி, மராத்தி, தமிழ், குஜராத்தி போன்ற மொழிகளிலும் இந்த ஆப் கிடைக்கிறது.

பாரத் காலர் உருவாக்கப்பட்டது ஏன்?

  • பாரத் காலரை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள நோக்கம் இந்தியாவிற்கு அதன் சொந்த Caller ID ஆப் ஒன்றை வழங்க வேண்டி தான். 
  • தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக TrueCaller ஒரு spyware ஆக இருக்கலாம் என கருதி இந்திய இராணுவம் தடைசெய்த பிறகு BharatCaller அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்ரூ காலரை மொபைல் போன்களிலிருந்து உடனடியாக நீக்குமாறும் இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Views: - 309

0

0