இந்தியாவின் boAt பிராண்டின் Stone 1200 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம் | விலை & விவரக்குறிப்புகள் இங்கே

Author: Dhivagar
2 September 2021, 2:28 pm
Indian brand boAt launches Stone 1200 Bluetooth speaker
Quick Share

BoAt Stone 1200 ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் ரூ.3,299 விலையில் அமேசானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் இந்தியாவில் பலரும் எதிர்பார்க்கும் ஒரு சாதனமாக உள்ளது. இந்தியாவில் பாக்கெட்-இணக்கமான ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த பட்டியலில் JBL, Sony மற்றும் LG போன்ற முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி Mivi, boAt மற்றும் Zebronics மற்றும் pTron போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்களின் போர்ட்டபிள் ஸ்பீக்கர்களும் உள்ளன. 

அந்த வகையில், ஆக்‌ஷன் டெக்னாலஜி நிறுவனம் இந்திய ஆடியோ பிராண்ட் ஆன boAt உடன் இணைந்து புதிய போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

boAt Stone 1200 விலை மற்றும் விற்பனை விவரங்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போர்ட்டபிள் ஸ்பீக்கர் போட் ஸ்டோன் 1200 ப்ளூடூத் ஸ்பீக்கர் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.3,299 ஆகும். இது அமேசான் இந்தியா, boAt-lifestyle.com மற்றும் சில்லறை கடைகள் வழியாக மூன்று வண்ண வகைகளில் கிடைக்கிறது, இவை மெரூன், கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

boAt Stone 1200 விவரக்குறிப்புகள்

​​போஅட் ஸ்டோன் 1200 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் 360 டிகிரி உருளை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்பீக்கரின் நடுவில் ஒரு வட்ட வடிவமைப்பு உள்ளது, இது அனைத்து கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. 

இதில் ஒலியைக் கட்டுப்படுத்த இரண்டு பொத்தான்கள், ஒரு ஸ்மார்ட் அசிஸ்டன்ட் பொத்தான், இசையை வேகமாக ஃபார்வேர்டு செய்ய ஒரு பொத்தான், இசையை இயக்க அல்லது இடைநிறுத்த ஒரு பொத்தான் , TWS ஆடியோ பொத்தான் மற்றும் பேட்டரி இண்டிகேட்டர் LED விளக்குகள் ஆகியவற்றை கொண்டிருக்கும். இது கேரி ஸ்ட்ராப் உடன் கிடைக்கும், இதன் உதவியுடன் பயனர்கள் அதை எடுத்துச் செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இதன் தொழில்நுட்ப விவரங்களைப் பொறுத்த வரையில், போட் ஸ்டோன் 1200 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கரில் இரண்டு 76 மிமீ முழு அளவிலான டைனமிக் டிரைவர்கள் 6 ஓம்ஸ் மின்தடை மற்றும் 75 டெசிபல் உணர்திறன் கொண்டுள்ளது. 

இது IPX7 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு பூச்சுடன் வருகிறது. இது 10 மீட்டர் வரம்பிற்குள் செயல்படும் இணைப்பிற்காக ப்ளூடூத் பதிப்பு 5.0 ஐ கொண்டுள்ளது. இது டைப்-C போர்ட், AUX மற்றும் FM இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. போட் ஸ்டோன் 1200 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் 3,600 mAh பேட்டரியுடன் வருகிறது, இது ஒன்பது மணிநேர பிளேபேக் நேரத்தையும் நான்கு மணிநேர சார்ஜிங் நேரத்தையும் வழங்கக்கூடியது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 258

0

0