மேலும் 15 சீன செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு | உங்களுக்கு பிடித்த செயலிகள் இந்த பட்டியலில் இருக்கிறதா?
6 August 2020, 4:39 pmஇந்தியாவில் மேலும் 15 சீன செயலிகளை தடைச்செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் சுற்றில் 59 சீன செயலிகளையும், இரண்டாவது சுற்றில் 47 செயலிகளையும் அரசாங்கம் ஏற்கனவே தடை செய்துள்ளது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.
ET இன் அறிக்கையின்படி, போட்டோ எடிட்டர் ஏர்பிரஷ் (AirBrush), மெய்பாய் (Meipai), போக்ஸ்ஸ்காம் (BoXxCAM) உள்ளிட்ட மேலும் 15 சீன செயலிகளை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் Android ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிரபலமான செயலிகளை உருவாக்கும் Meitu நிறுவனத்துக்குச் சொந்தமானது. இது தவிர, நெட்டீஸ் (NetEase), ஹீரோஸ் வார் (Heroes War), க்யூவீடியோ இன்க் வழங்கும் ஸ்லைடு பிளஸ் (SlidePlus) ஆகியவை நாட்டில் தடைசெய்யப்பட்ட செயலிகளில் அடங்கும்.
மேலும், சியோமி Mi Browser Pro செயலியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பைடு தேடல் (Baidu Search) மற்றும் தேடல் லைட் (Search Lite) செயலிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
எந்த செயலியேனும் வெவ்வேறு பெயர்களுடன் திரும்பி வர முயற்சித்தால் நாங்கள் மேலும் நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சீன செயலிகளுக்கு பெரும் இடியாக இருக்கும், மேலும் இதற்கான காரணம் தனியுரிமை மீறல்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இந்திய இராணுவம் தனது பணியாளர்களுக்கு 89 செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிரபலமான செயலிகளான பேஸ்புக், டிக்டாக், டிண்டர், பப்ஜி, இன்ஸ்டாகிராம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களிலிருந்து 89 செயலிகளை நீக்குமாறு ராணுவத்தினர் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டது.
இந்திய இராணுவ வட்டாரங்களின்படி, தகவல் கசிவு ஏற்படுவதை நோக்கமாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ANI அறிக்கையின் படி, பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் முக்கியமான தரவுகள் கசிந்ததைத் தொடர்ந்து இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றாதவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது”.
மேலும் ANI கூறுகையில், “இந்தியாவில் 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்ததையடுத்து இந்த முடிவு வந்தது. ஏனெனில், அச்செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறி இந்த செயலிகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.