சியோமி போன்களில் வரும் பில்ட்-இன் Mi பிரௌசர் புரோ தடை | இந்திய அரசாங்கம் அதிரடி

5 August 2020, 4:23 pm
Indian Government Bans Xiaomi’s Built-in Mi Browser Pro
Quick Share

கடந்த சில வாரங்களாக இந்திய அரசாங்கம் சீன செயலிகளை தொடர்ந்து தடை செய்து வருகிறது. முதலில் நாட்டிலிருந்து 59 சீன செயலிகளை தடைசெய்த பின்னர், மேலும் 200 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை ஆராய்ந்த பின்னர், இந்தியாவில் Mi பிரௌசர் புரோ செயலியை அரசாங்கம் இன்று தடை செய்துள்ளது.

Mi பிரௌசர் சியோமி ஸ்மார்ட்போன்களில் முன்பே நிறுவப்பட்டுள்ளது, இந்தத் தடை இப்போது செயலியைப் பயனற்றதாக ஆக்குகிறது. இந்திய அரசிடம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் தடை நீக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில், பிரௌசர் மீதான தடை, விற்பனையைப் பொருத்தவரை சியோமியின் தொலைபேசிகளின் செயல்திறனை மோசமாக பாதிக்கும் என்று Market Analyst தெரிவித்துள்ளது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சியோமி சுட்டிக்காட்டியுள்ளபடி, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் எந்த இணைய பிரௌசரையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மேலும், அரசாங்கத்தின் நடவடிக்கை “சாதனங்களின் செயல்திறனை பாதிக்காது” என்று நிறுவனம் வலியுறுத்துகிறது.

இரு நாடுகளுக்கிடையில் லடாக் மோதல்களுக்குப் பின்னர் பல இந்திய வீரர்கள் இறந்ததை அடுத்து, இந்தியாவில் சீன எதிர்ப்பு உணர்வுகள் அதிகரித்து வருகின்றன. பல சீன செயலிகளில் தனியுரிமை சிக்கல்கள் உள்ளதால், அரசாங்கம் பல செயலிகளை தடைசெய்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 14

0

0

1 thought on “சியோமி போன்களில் வரும் பில்ட்-இன் Mi பிரௌசர் புரோ தடை | இந்திய அரசாங்கம் அதிரடி

Comments are closed.