சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் மினியேச்சர் ரயில் கேரள கிராமத்தில் அறிமுகம்

3 November 2020, 8:53 am
India's first solar-powered miniature train launched at Veli Tourist Village in Kerala
Quick Share

இந்தியாவிலேயே முதன்முதலில் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் மினியேச்சர் ரயிலை கேரளா மாநிலத்தில் உள்ள வேலி (Veli) சுற்றுலா கிராமத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை அன்று துவங்கி வைத்தார்.

குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் இந்த ரயில், பனோரமிக் இடத்திலுள்ள வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட 60 கோடி டாலர் மதிப்புள்ள திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

மாநில தலைநகரின் புறநகரில் அமைந்துள்ள சுற்றுச்சூழலுக்கு நட்புடனான சுற்றுலா கிராமத்திற்கு நகர்ப்புற பூங்கா மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றை விஜயன் அர்ப்பணித்தார். இந்த இடத்தில் உள்ள வேலி ஏரி அரேபிய கடலை சந்திக்கும் இடமாகும்.

மினியேச்சர் ரெயில் ஒரு சுரங்கப்பாதை, நிலையம் மற்றும் டிக்கெட் அலுவலகம் உட்பட ஒரு முழுமையாக கட்டமைக்கப்பட்ட ரயில் அமைப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 45 பேர் தங்கக்கூடிய மூன்று போகிஸ் உள்ளது.

“சுற்றுச்சூழலுக்கு நட்புடனான சூரிய சக்தியில் இயங்கும் 2.5 கி.மீ மினியேச்சர் ரயில்வே பார்வையாளர்களுக்கு இயற்கையின் அழகை ரசிக்க உதவும். பத்து கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் நாட்டிலேயே இது போன்ற முதல் திட்டமாகும்” என்று முதல்வர் தனது ஆன்லைன் உரையில் தெரிவித்தார்.

ரயிலின் இன்ஜின் செயற்கை நீராவி, பழங்கால நீராவி இன்ஜின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பழமையான உணர்வுகளைத் தூண்டக்கூடும். ஸ்டேஷன் ஹவுஸ் ஒரு பாரம்பரிய பாணியில் வடிவமைக்கப்பட்டது.

இந்த அமைப்பால் உருவாக்கப்படும் உபரி ஆற்றல் கேரள மாநில மின்சார வாரியத்தின் கட்டத்திற்கு அனுப்பப்படும் என்று விஜயன் கூறினார். ஒரு சுற்றுலா வசதி மையம், மாநாட்டு மையம் மற்றும் ஆர்ட் கஃபே ஆகியவையும் விரைவில் வேலி கிராமத்தில் திறக்கப்பட உள்ளன.

மாநாட்டு மையத்தில் ஒரு கலைக்கூடம், டிஜிட்டல் டிஸ்பிளே வசதி, மாநிலத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் கலாச்சார மையங்கள் மற்றும் திறந்தவெளி அரங்கம் ஆகியவை இடம்பெறும். இந்த உலகத்தரம் வாய்ந்த வசதிகள் வேலிக்கு புதிய தோற்றத்தை அளிக்கும் என்று முதல்வர் கூறினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளு சுரேந்திரன், சுற்றுலாத்துறைக்கு சுமார் 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டார். இவற்றில், வேலியிலேயே ரூ.60 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது வேலி கிராமத்தைச் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்கான அரசாங்கங்கத்தில் முயற்சியைக் காட்டுகிறது. வேலி கிராமத்தில் செய்யப்படுத்தபட்ட திட்டங்களில், ரூ.20 கோடி மதிப்புள்ள பணிகள் நிறைவடைந்துள்ளன, மற்றும் பிற திட்டங்கள் வளர்ச்சி பணியில் இருந்து வருகின்றன. மேலும் சுற்றுலா வசதி மையம் ஜனவரியில் திறக்கப்படும்.

நகர்ப்புற பூங்காவிற்கு ரூ.5 கோடி மற்றும் நீச்சல் குளத்திற்கு ரூ.2.5 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Views: - 53

0

0

1 thought on “சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் மினியேச்சர் ரயில் கேரள கிராமத்தில் அறிமுகம்

Comments are closed.