ரூ.7500 க்கும் குறைவான விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

30 September 2020, 9:42 am
Infinix Hot 10 Lite Entry-Level Smartphone Goes Official
Quick Share

ஹாட் 10 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் இன்ஃபினிக்ஸ் அதன் பட்ஜெட் விலைப்பிரிவை இப்போது மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 10 ஐத் தொடர்ந்து, நிறுவனம் இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் கென்யாவில் நுழைவு நிலை மீடியா டெக் ஹீலியோ செயலி மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பு போன்ற அம்சங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்:

இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் முழு விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் 6.78 அங்குல அளவைக் கொண்ட LCD டிஸ்ப்ளேவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு HD+ தெளிவுத்திறனை வழங்குகிறது. நிறுவனம் கைபேசியின் எந்த அதிகாரப்பூர்வ படத்தையும் வெளியிடவில்லை என்பதால், ஒரு பஞ்ச்-ஹோல் அல்லது வாட்டர் டிராப் நாட்ச் உடன் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா தொகுதி பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் 13MP முதன்மை சென்சார், 2MP இரண்டாம் நிலை சென்சார் மற்றும் பொக்கே விளைவுகளுக்காக மற்றொரு 2MP சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, சாதனம் முன்பக்கத்தில் 8MP கேமராவைக் கொண்டுள்ளது.

ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ A20 நுழைவு நிலை செயலியைப் பயன்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக விரிவாக்கலாம்.

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்ஸில் இயங்குகிறது மற்றும் மேலே ஒரு XOS பயனர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. இந்த சாதனம் 4 ஜி LTE, வைஃபை, புளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது. கைபேசி அதன் ஆற்றலை 5,000 mAh பேட்டரி யூனிட் மூலம் பெறுகிறது, இது நிலையான 10W சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

கென்யாவில் இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட்டின் விலை Kshs 10,500 ஆகும், இது இந்திய மதிப்பில் 7,139 ரூபாய் ஆகும். மறுபுறம், 3 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாதிரியின் விலை குறித்த விவரங்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்தியாவிலும் மீதமுள்ள சந்தைகளிலும் புதிய ஹாட் 10 சீரிஸ் போன்களை இன்ஃபினிக்ஸ் எப்போது அறிமுகம் செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Views: - 11

0

0