Dar-Link நுட்பத்துடன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 10S இந்தியாவில் வெளியாகும் தேதி இதுதான்!

14 May 2021, 8:24 pm
Infinix Hot 10S to launch in India on May 20: Here’s what we know so far
Quick Share

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டிரான்சியன் குழுமத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டான இன்ஃபினிக்ஸ் வியாழக்கிழமை அதன் வரவிருக்கும் ஹாட் 10S ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை வெளியிட்டது. இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொலைபேசி பிளிப்கார்ட்டில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் ஹார்ட் ஆஃப் ஓஷன், மொராண்டி கிரீன், 7-டிகிரி பர்பில் மற்றும் 95 டிகிரி பிளாக் ஆகிய நான்கு வண்ண வகைகளில் வரும்.

வரவிருக்கும் ஹாட் 10S இன் சில விவரக்குறிப்புகளையும் நிறுவனம் வெளியிட்டது. இன்ஃபினிக்ஸ் கூற்றுப்படி, கைபேசி மேம்பட்ட மீடியா டெக் ஹீலியோ G85 சிப்செட்டுடன் சமீபத்திய XOS 7.6 உடன் இயக்கப்படும், 

மேலும் Dar-Link தொழில்நுட்பத்துடன் சிறந்த மற்றும் மென்மையான கேமிங் செயல்திறனை வழங்கக்கூடியதாக இருக்கும். இது புதிய கூகிள் ஓஎஸ் பதிப்பான ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும். தொலைபேசி இரண்டு மெமரி வகைகளில் வரும்: 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி விரிவாக்கக்கூடிய மெமரி விருப்பமும் இருக்கும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரையில், ​​இன்ஃபினிக்ஸ் ஹாட் 10S ரூ.10,000 க்கும் குறைவான விலையில் இந்த போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10S ஏற்கனவே நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கைபேசியில் 6.82 இன்ச் HD+ TFT ‘அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே’ உள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 அவுட்-ஆஃப்-பாக்ஸ் மற்றும் மீடியா டெக் ஹீலியோ G85 செயலியில் இயங்குகிறது. 

பட்டியலின்படி, தொலைபேசியில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் உள்ளது. இது 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிடத்தை ஆதரிக்கும் மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. 6,000 mAh பேட்டரி உடன் இயங்குகிறது. இது 62 நாட்கள் காத்திருப்பு நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, இன்ஃபினிக்ஸ் ஹாட் 10S ஒரு மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார் மற்றும் AI லென்ஸைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும்.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10S மே 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Views: - 183

0

0