அட இவ்ளோ கம்மி விலையில இன்னொரு போனா? Infinix Smart 5A ஸ்மார்ட்போன் அறிமுகமாகியிருக்கு? எவ்ளோ விலை? என்ன ஸ்பெஷல்?

Author: Dhivagar
3 August 2021, 8:53 am
Infinix Smart 5A Android Go Smartphone Launched In India
Quick Share

இன்ஃபினிக்ஸ் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் தொடர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவில் இணைந்த சமீபத்திய மாடல் ஸ்மார்ட் 5A என்பது தான். நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து இப்போது இந்த மாடல் அறிமுகம் ஆகியுள்ளது. புதிய மாடல் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்), HD+ டிஸ்ப்ளே மற்றும் பெரிய 6,000 mAh பேட்டரியைக் கொண்ட பதிப்பாகும். புதிய கைபேசியின் விலை எவ்வளவு மற்றும் இதில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்:

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5A முக்கிய விவரக்குறிப்புகள்

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஆனது Helio A20 செயலியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குவாட் கோர் மீடியாடெக் செயலி 1.8GHz பேஸ் அதிர்வெண் மற்றும் PowerVR GE GPU ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சாதனம் ஒரே ஒரு 2 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளமைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற மைக்ரோ SD கார்டு ஆதரவும் உள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 720 x 1560 பிக்சல்கள் ரெசல்யூஷன் உடன் 6.52-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் பேனல் 19:5:9 என்ற திரை விகிதத்தையும், 8 MP செல்ஃபி கேமரா உடன் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பையும் கொண்டிருக்கும்.

பின்புற பேனலில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும், இதில் 8MP சென்சார் மற்றும் இரண்டாம் நிலை AI ஆழ சென்சார் உள்ளது. கேமரா ஆட்டோ சீன் டிடெக்ஷன், HDR மற்றும் பொக்கே உள்ளிட்ட பல்வேறு படப்பிடிப்பு மாதிரிகளுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு) உடன் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் XOS 7.6 பயனர் இடைமுகம் முன்பே நிறுவப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மைக்ரோ USB போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், 4ஜி LTE, வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு விருப்பங்கள் ஆகியவற்றை வழங்குகிறது. பாதுகாப்பிற்காக பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. நிலையான 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000 mAh பேட்டரியும் இதில் உள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் 5A விலை & விற்பனை விவரங்கள்

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஆகஸ்ட் 9 முதல் ரூ.6,499 விலையில் வாங்க கிடைக்கும். கைபேசி பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். மிட்நைட் பிளாக், ஓஷன் வேவ் மற்றும் குவெட்சல் சியான் ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Views: - 323

0

0