இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i போனின் இந்திய வெளியீட்டு தேதி உறுதி! முக்கிய விவரங்கள் இங்கே

25 November 2020, 4:03 pm
Infinix Zero 8i India Launch Officially Confirmed
Quick Share

இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவில் புதிய ‘ஜீரோ’ தொடரை அறிமுகப்படுத்த இன்ஃபினிக்ஸ் பிராண்ட் தயாராகி வருவதாக கூறப்பட்டது. இந்நிறுவனம் வரவிருக்கும் வரிசையில் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8 மற்றும் ஜீரோ 8i மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் இரு போன்களும் வரும் என்று வதந்திகள் தெரிவித்தன. அதன்படியே, இந்த பிராண்ட் முதலில் ஜீரோ 8i அறிமுகப்படுத்தும் என்று உறுதியாகியுள்ளது. 

புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு எப்போது எப்போது? என்னென்ன அம்சங்கள் இருக்கும் பார்க்கலாம் வாங்க

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனமே தனது சமீபத்திய போனின் வருகையை அறிவித்துள்ளது. நாட்டில் ஜீரோ 8 போன் எப்போது கிடைக்கும் என்பதை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i தவிர, நிறுவனம் மற்ற தயாரிப்பு வெளியீடுகளுக்கும் தயாராகி வருகிறது.

இந்நிறுவனம் ஸ்மார்ட் டிவி பிரிவில் இன்ஃபினிக்ஸ் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் ஸ்னொகோர் சவுண்ட்பார் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இருப்பினும், மீதமுள்ள தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மை தற்போது அறிவிக்கப்படவில்லை.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i முக்கிய அம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i சமீபத்தில் இந்தியாவுக்கு வெளியே அறிவிக்கப்பட்டது, எனவே, இது என்ன அம்சங்களை வழங்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G90T செயலியுடன் அறிமுகம் செய்யப்படும். சிப்செட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்படும். இது வெளிப்புற மைக்ரோ SD கார்டு ஆதரவையும் கொண்டிருக்கும்.

ஜீரோ 8i, 6.85 அங்குல LCD டிஸ்ப்ளே FHD+ திரை தெளிவுத்திறன் கொண்டது. இதன் பேனல் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது மற்றும் செல்பி கேமராக்களுக்கு இரட்டை பஞ்ச்-ஹோல் உள்ளது. இந்த சாதனம் 16MP முதன்மை செல்பி கேமராவுடன் 8MP லென்ஸைக் கொண்டுள்ளது.

பின்புறத்தில், 48MP முதன்மை கேமரா உள்ளது, இது 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP சென்சார்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. கைபேசி ஆன்ட்ராய்டு 10 OS உடன் இயங்கும் மற்றும் XOS 7 பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது. இதில் 4,500 mAh பேட்டரி யூனிட் பொருத்தப்பட்டிருக்கும்.

Views: - 0

0

0