10 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் Infinix Concept Phone! அசத்தும் புது அறிமுகம்

Author: Dhivagar
29 June 2021, 1:50 pm
Infinix's concept phone can change colors, fully-charge in 10 minutes
Quick Share

இன்பினிக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் அதன் Concept Phone 2021 ஐ அறிமுகம் செய்துள்ளது, இது முன்னர் Infinix Zero X என்ற பெயரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்மார்ட்போன் பின்புற பேனலில் வண்ணம் மாறும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அதோடு இதன் முக்கியமான அம்சம் என்றால் இதன் சார்ஜிங் திறன் தான். இந்த கான்செப்ட் போன் வெறும் 10 நிமிடங்களுக்குள் 0 முதல் 100% வரை சார்ஜ் செய்துகொள்ள முடியும், இது தொழில்துறையில் முன்னணி நுட்பமாக விளங்கும் 160W வயர்டு ஃபாஸ்ட-சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு சாத்தியமாகிறது.

இது 88 டிகிரி வளைந்த டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் 135 மிமீ பெரிஸ்கோப் லென்ஸையும் கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 டிஸ்பிளேவில் கைரேகை சென்சார் உடன் பஞ்ச்-ஹோல் கட்-அவுட் உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் முழு HD+ தெளிவுத்திறனுடன் 6.67 அங்குல AMOLED திரையைக் கொண்டுள்ளது.

பின்புற பேனல் வண்ணங்களை மாற்ற எலக்ட்ரோக்ரோமிக் மற்றும் எலக்ட்ரோலுமினசென்ட் தொழில்நுட்பத்தை ஒன்றாக பயன்படுத்துகிறது. உதாரணமாக, உள்வரும் அழைப்பைப் பெறும்போது அது வெள்ளியிலிருந்து நீல நிறமாக மாறும், அதே போல சார்ஜ் செய்யும்போது பச்சை அனிமேஷன் வடிவமைப்பைக் காண்பிக்கும்.

இன்ஃபினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 ஒரு 64 பின்புற மெயின் சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 60 X டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 MP டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32MP செல்பி கேமரா உள்ளது.

இன்ஃபினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மீடியாடெக் ஹீலியோ G95 செயலி உடன் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 11 உடன் boot up ஆகிறது மற்றும் 4,000 mAh பேட்டரியை 160W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது.

அதிவேக வயர்டு சார்ஜிங் மூலம், சாதனம் 10 நிமிடங்களுக்குள் 0 முதல் 100% வரை சார்ஜ் ஆகும் திறன் கொண்டது.

இது ஒரு கருத்து சாதனம் என்பதால், கான்செப்ட் போன் 2021 ஐ அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட இன்ஃபினிக்ஸ் உடனடித் திட்டங்கள் எதுவும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், முதன்மை ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்ற பல பிரீமியம் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 201

0

0