டீனேஜர்களுக்காகவே புதிய அம்சத்தை வெளியிடும் இன்ஸ்டாகிராம்!!!
Author: Hemalatha Ramkumar11 October 2021, 3:11 pm
இன்ஸ்டாகிராமை இளம் பயனர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றும் முயற்சியில், இந்த புகைப்பட பகிர்வு செயலி இப்போது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து டீனேஜர்களைத் தள்ளி வைக்க ‘Take a break’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய அம்சங்களை குலோபல் அஃபையர்ஸூக்கான பேஸ்புக் துணைத் தலைவர் நிக் கிளெக் அறிவித்தார்.
சுவாரஸ்யமாக, ஒரு முன்னாள் பேஸ்புக் ஊழியர் ஒருவர் பேஸ்புக் டீனேஜ் வயதினருக்கு எவ்வளவு தீங்கு விளைவித்து வருகிறது என்ற விஷயத்தை போட்டு உடைத்த அடுத்த சில நாட்களில் இந்த அம்சம் வெளியாக உள்ளது.
இது குறித்து க்ளெக் பேசியபோது, “கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கும் ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறோம். எந்தெந்த இடங்களில் ஒரு இளைஞன் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான உள்ளடக்கத்தைப் பார்க்கிறான் என்பதை எங்கள் அமைப்பு (Settings) கண்டுபிடித்து விடும். மேலும் அதன் உள்ளடக்கம் அதற்கு உகந்ததாக இருக்காது. எனவே, அவர்களின் நல்வாழ்வுக்காக மற்ற உள்ளடக்கத்தைப் பார்க்க நாங்கள் அவர்களைத் தள்ளுவோம். ”
கூடுதலாக, நிறுவனம் இளைஞர்களை தளத்தில் இருந்து பிரேக் எடுக்கும்படி கேட்கும் அம்சத்தில் வேலை செய்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார். இருப்பினும், நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டபோது குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்கவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், குழந்தை பாதுகாப்பு வழக்கறிஞர்களிடமிருந்து கடுமையான பின்னடைவை எதிர்கொண்டதால், 13 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கான, இன்ஸ்டாகிராம் கிட்ஸை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நிறுத்தியது.
இதற்கிடையில், முன்னாள் ஊழியர் ஹவுகன், விசில்ப்ளோராக மாறி, செனட் கமிட்டி முன் பேஸ்புக்கில் தனது அனுபவத்தைப் பற்றி வாக்குமூலம் அளித்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் டீனேஜ் வயதினருக்கு தீங்கு விளைவிக்கும் சூழலை உருவாக்கியதாகக் கூறி சமூக ஊடக நிறுவனத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
0
0