இவ்வளவு குறைந்த விலையில் ஐபோன் 11 கிடைக்குமா! செம்ம.. செம்ம..! எதிர்பார்ப்புகளை எகிறவிடும் அமேசான்!

Author: Dhivagar
9 October 2020, 6:18 pm
iPhone 11 to cost below ₹50,000 during Amazon's Great Indian Festival sale
Quick Share

இந்தியாவில் அமேசானின் மிகப்பெரிய பண்டிகைக்கால விற்பனை அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் அனைத்து வகைகளிலிருந்தும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் தயாரிப்புகளை வழங்கும். அமேசான் இந்தியா ஸ்மார்ட்போன்களில் சில தள்ளுபடிகளை வழங்குவதாக முன்னோட்டங்களைக் காண்பித்து வருகிறது, இவற்றில் ஐபோன் 11 ரூ.50,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்றும்  தெரியவந்துள்ளது.

அமேசான் இந்தியா ஐபோன் 11 மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. ஐபோன் 11 இன் தள்ளுபடி விலை வெளியிடப்படவில்லை, ஆனால் டீஸர் ரூ.4_,999 என்று வெளிப்படுத்துவதால் இது ரூ.50,000 க்கும் குறைவாக விலைக்கொண்டு இருக்கும். 

ஒப்பிடுகையில், ஐபோன் 11 64 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய அடிப்படை மாடலுக்கான விலை ரூ.68,300 முதல் தொடங்குகிறது. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொண்ட ஐபோன் 11 விலை முறையே ரூ.73,600 மற்றும் ரூ.84,100 விலையைக் கொண்டுள்ளது. அமேசான் இந்தியா பெரும்பாலும் ஐபோன் 11 இன் மற்ற இரண்டு வகைகளுக்கு தள்ளுபடியை வழங்கும்.

அமேசான் இந்தியா விரைவில் ஐபோன் 11 இன் தள்ளுபடி விலையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் தயாரிப்புகளிலும் சலுகைகள் இருக்கும், ஆனால் இந்த ஒப்பந்தங்கள் பற்றிய  விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஐபோன் 11 ஆனது 6.1 இன்ச் லிக்விட் ரெடினா HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது A13 பயோனிக் சில் மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் இரண்டு 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் வைட் ஆங்கிள் கேமராக்கள் உள்ளன, மேலும் 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் கேமரா முன்பக்கத்தில் உள்ளது. ஐபோன் 11 IP68-மதிப்ப்பீட்டைக் கொண்டுள்ளது. இது ஸ்பிளாஸ், நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு eSIM உடன் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது. ஐபோன் 11 இல் NFC, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வைஃபை அழைப்புக்கான வசதி உள்ளது.

ஐபோன் 11 போனைத் தேர்வு செய்ய ஆறு வண்ணங்கள் உள்ளன. இவற்றில் ஊதா, மஞ்சள், பச்சை, கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகியவை அடங்கும்

Views: - 225

1

0