ஐபோன் 12 மினி, ஐபோன் 12 போன்களின் பேட்டரி விவரக்குறிப்புகள் வெளியானது!

22 October 2020, 8:19 pm
iPhone 12 mini, iPhone 12 Battery Specifications Revealed
Quick Share

ஆப்பிள் கடந்த வாரம் ஐபோன் 12 தொடரின் சமீபத்திய தலைமுறை ஐபோன்களை அறிமுகம் செய்தது. வழக்கமாக, அறிவிப்பு நேரத்தில் ஐபோன்களின் பேட்டரி விவரங்களை ஆப்பிள் வெளிப்படுத்தாது, இது மூன்றாம் தரப்பு நபர்களால் மட்டுமே வெளியாகும். இப்போது, ​​இந்த புதிய சாதனங்களின் விற்பனை உலகளவில் அறிமுகமாகியுள்ளதால், பேட்டரி திறன்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஐபோன் 12 பேட்டரி விவரங்கள் 

டெக்னோபிளாக் வழியாக பிரேசிலிய தொலைத் தொடர்பு நிறுவனம் அனடெல் நுழைவு நிலை ஐபோன் 12 மாடல்களின் பேட்டரி விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. தொடரில் மிகவும் மலிவு விலை சாதனமான 5.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 12 மினி 2227 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், இது ஐபோன் SE 2020 பயன்படுத்தும் 1821 mAh பேட்டரியை விட ஒப்பீட்டளவில் பெரியது.

மறுபுறம், இந்த தொடரின் ஸ்டாண்டர்ட் மாடல், 6.1 அங்குல டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 12 2815 mAh பேட்டரியைப் பயன்படுத்துகிறது. இந்த பேட்டரி ஐபோன் 11 ஐ விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 11 நிலையான மாறுபாடு 3110 mAh பேட்டரி மூலம் ஆற்றல் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியின் பேட்டரி திறன்களைத் தவிர, தொலைத்தொடர்பு நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ தொடரில் மற்ற இரண்டு மாடல்களின் தகவல்களை வெளியிடவில்லை. இந்த மாடல்களின் பேட்டரி திறனை அக்டோபர் 23 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அறிமுகம் ஆகும்போது தெரிந்துக்கொள்ள முடியும்.

Views: - 0

0

0