இந்த வடிவில் பேட்டரியா? ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் பேட்டரியின் முக்கிய விவரங்கள்

13 November 2020, 5:12 pm
iPhone 12 Pro Max Has an L-Shaped 3,687mAh Battery, Reveals Teardown
Quick Share

கடந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 தொடரை அறிமுகப்படுத்தியது, ​​நிறுவனம் வழக்கமான பாணியில், தொலைபேசிகளின் முக்கிய தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை. நான்கு புதிய ஐபோன்களிலும் கிடைக்கும் பேட்டரி திறன் பற்றிய தகவலையும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. இப்போது பல விளக்க வீடியோக்கள் மூலம், ஐபோன் 12 புரோ மேக்ஸில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் சரியான பேட்டரி திறன் மற்றும் வடிவம் பற்றிய தகவல் நமக்கு தெரியவந்துள்ளது.

சீன மைக்ரோ பிளாக்கிங் தலமான வெய்போவில் பகிரப்பட்ட ஒரு விளக்க வீடியோவின் படி, ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஒரு 3,687 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது அதன் முன்னோடியான ஐபோன் 11 புரோ மேக்ஸில் உள்ள 3,969 mAh பேட்டரி பேக்கை விட சற்று குறைவாக உள்ளது. ஐபோன் 12 புரோ மேக்ஸ் 5 ஜி காரணமாக அதிக ஆற்றலை பயன்படுத்தும் வேளையில் குறைந்த திறன் கொண்ட பேட்டரியை நிறுவனம் பயன்படுத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

iPhone 12 Pro Max Has an L-Shaped 3,687mAh Battery, Reveals Teardown

ஐபோன் 12 புரோ மேக்ஸின் பேட்டரி திறன் குறித்து முன்னதாகவே தகவல் வெளியாகியிருந்தது. கடந்த மாதம், ஐபோன் 12 புரோ மேக்ஸின் TENAA பட்டியல் 3,687mAh பேட்டரி இருப்பதை சுட்டிக்காட்டியது. 

ஆப்பிளின் முதன்மை தொலைபேசியின் பேட்டரி திறன் குறித்த தகவல்கள் மட்டுமல்லாது கூடுதலாக, லாஜிக் போர்டின் அளவு ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோவில் காணப்படுவதைப் போன்றது என்பதை விளக்க வீடியோ வெளிப்படுத்துகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி L வடிவமைப்பில் உள்ளது.

ஐபோன் 12 புரோ மேக்ஸ் நவம்பர் 6 ஆம் தேதி முதல் முன்கூட்டிய ஆர்டர் செய்ய கிடைக்கிறது, இன்று நவம்பர் 13 ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறது. இது 128 ஜிபி, 256 ஜிபி, மற்றும் 512 ஜிபி ஆகிய மூன்று சேமிப்பு வகைகளில் வருகிறது. 

அடிப்படை 128 ஜிபி மாடலின் விலை ரூ. 1,29,900 ஆகவும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 1,39,900 ஆகவும். டாப்-எண்ட் 512 ஜிபி மாடலுக்கு ரூ.1,59,900 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக பெறலாம். இதன் விற்பனை இப்போது இந்தியாவில் நேரலையில் உள்ளது.

Views: - 24

0

0

1 thought on “இந்த வடிவில் பேட்டரியா? ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் பேட்டரியின் முக்கிய விவரங்கள்

Comments are closed.