என்ன டக்குனு இவ்ளோ விலை குறைஞ்சிடுச்சு! இந்த 5ஜி போனை நீங்க இப்பவே வாங்கலாம்!

24 June 2021, 3:33 pm
IQOO 3 price drop in India makes it a compelling choice in mid budget segment
Quick Share

கடந்த ஏப்ரல் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 3, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்னாப்டிராகன் 825 உடன் இயங்கும் ஒரு  ஸ்மார்ட்போன் ஆக வெளியானது. இப்போது இந்த iQOO 3 போனுக்கான விலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது..

12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO 3 டாப் மாடல் இப்போது ரூ.22,495 விலையில் கிடைக்கிறது. இந்த மாடல் 5ஜி இணைப்பையும் கொண்டுள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியான தகவல். அதே சமயம் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை இப்போது ரூ.18,995 ஆகவும், அடிப்படை 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை இப்போது ரூ.17,495 நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுகமாகும் சமயத்தில், iQOO 3 128 ஜிபி மாடல் ரூ.29,990 விலையுடனும், 256 ஜிபி மாடல் ரூ.34,990 விலையுடனும், 5ஜி வசதி கொண்ட டாப் மாடம் ரூ.39,990 விலையுடனும் அறிமுகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடம் ஆனதை அடுத்து கிட்டத்தட்ட 50 % வரை அனைத்து ஸ்மார்ட்போன்களும் விலை குறைந்துள்ளது.

IQOO 3 6.44 அங்குல முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் 409 ppi பிக்சல் அடர்த்தி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 180 ஹெர்ட்ஸ் மறுமொழி விகிதம் மற்றும் 91.4 சதவீதம் திரை-முதல்-உடல் விகிதம், 800 நைட்ஸ் பிரகாசம் மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மற்றும் அட்ரினோ 650 GPU உடன் 12 ஜிபி LPDDR 5 RAM மற்றும் 256 ஜிபி UFS 3.1 வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் மற்றும் 2 மெகாபிக்சல் பொக்கே கேமராவுடன் மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ் உடன் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. 

முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,400 mAh பேட்டரி உடன் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

இது நவீன அம்சங்களுடன், iQOO 3 இப்போதும் சியோமியின் ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ், Mi 11 லைட் மற்றும் அதே பிராண்டில் இருக்கும் iQOO Z3 ஸ்மார்ட்போனுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியாளராக நிற்கிறது. 

Views: - 270

0

0