ரூ.20,000 தள்ளுபடி உடன் கிடைக்கும் வீட்டைச் சுத்தம் செய்யும் iRobot வேக்கம் கிளீனர்கள்!

3 May 2021, 4:48 pm
iRobot vacuum cleaners get discounts of up to Rs 20,000
Quick Share

இந்தியாவில் ஐரோபோட் தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தரான ப்யூர்சைட் சிஸ்டம்ஸ், தங்கள் கோடைகால சலுகையை அறிவித்துள்ளது. இப்போது நுகர்வோர் தங்கள் வசதிக்காக மிகவும் மலிவு விலையில் முதன்மை அம்சங்களுடன் கூடிய சமீபத்திய சுத்தம் செய்யும் ரோபோ சாதனங்களை வீட்டிற்குப் பெறலாம்.

அதிக அம்சங்கள் கொண்ட வேக்கம் கிளீனர்களான ரூம்பா i7 மற்றும் i7 + முறையே ரூ.49,900/- மற்றும் ரூ.54,900/- தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. 

வாடிக்கையாளர்கள் மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூம்பா i3 மற்றும் i3+ வேக்கம் கிளீனர்களை முறையே ரூ.34,900/- மற்றும் ரூ.49,900/- என்ற தள்ளுபடி விலையில் பெறலாம். 

பட்ஜெட் பிரிவில், ரூம்பா 698 வேக்கம் கிளீனர் மாடலில் ப்யூர்சைட் சிஸ்டம்ஸ் ரூ.19,900/- ரூபாய் தள்ளுபடியை வழங்குகிறது. வேக்கம் கிளீனர் சாதனங்களை அடுத்து, தானியங்கி மாப்பிங் ரோபோ ஆன பிராவா ஜெட் M6 ரூ.49,900 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

அமேசான் இந்தியா இந்த சலுகையை மே 1 முதல் மே 5 வரை வழங்குகிறது, அதே சமயம் பிளிப்கார்ட் இந்தியா மே 2 முதல் மே 21 வரை இந்த விற்பனையை நடத்துகிறது. இந்த விற்பனை ஐரோபோட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைனிலும் தொடரும் மற்றும் பிற சில்லறை நிறுவனங்களிடத்தில் மே 5 முதல் மே 09 வரை இந்த சலுகையைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை அனைத்து ஐரோபோட், குரோமா மையங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளிலும் www.irobot.in உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் பெறலாம்.

Views: - 81

0

0

Leave a Reply