ஆசஸ் ஒரு சீன நிறுவனமா? உண்மை என்ன? பார்க்கலாம் வாங்க

Author: Dhivagar
8 October 2020, 11:05 am
Is Asus A Chinese Company Know About Founder, Country, And Company Details
Quick Share

பயனர் தரவை திருடி  பிற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படும் செயலிகள் மற்றும் விளையாட்டுகளை இந்திய அரசு தடை செய்யதது நாம் அறிந்த ஒன்றுதான். இந்த செயலிகளில் பெரும்பாலானவை சீனாவை தளமாக கொண்டது என்பது தெரிய வந்தது. இந்த தடை நிகழ்வுக்குப் பிறகு, இந்திய மக்கள் சீன செயலிகளைப் புறக்கணிக்க தொடங்கினர்.

இதையடுத்து, இந்திய பயனர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளின் உருவாக்குனர், உருவாக்கும் நாடு  மற்றும் நிறுவனத்தின் தகவல்கள் ஆகியவற்றை அறிய விரும்பினர். மடிக்கணினிகள், கணினிகள் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் அதில் பயன்படுத்தும் செயலிகள் வரையில் அது ஒரு சீன தயாரிப்பா இல்லையா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள விரும்பினார். இப்போது, பலரிடமும்  இருக்கும் கேள்வி என்னவென்றால்,  மொபைல்  பிராண்ட் ஆன ஆசஸ் ஒரு சீன நிறுவனமா என்பதுதான். அதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

ஆசஸ் ஒரு சீன நிறுவனமா?

இல்லை, ஆசஸ் ஒரு சீன நிறுவனம் அல்ல. ஆசஸ் அதிகாரப்பூர்வமாக ஆசுஸ்டெக் கம்ப்யூட்டர் இன்க் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு தைவானிய தொழில்நுட்ப பிராண்ட் ஆகும். இந்நிறுவனம் 2 ஏப்ரல் 1989 இல் உருவானது. மேலும் ஆசஸ் எனும் வார்த்தை “சீனர்களால் புகழ்பெற்றது” என்று பொருள்படும், இந்த வார்த்தை கிரேக்க புராணங்களிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தை சூ-ஹ்சியன் துங், டெட் ஹ்சு, வெய்ன் ஹ்சீ, மற்றும் எம்.டி. லயோ ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஜானி ஷிஹ் ஆசஸின் தலைவர் மற்றும் CBO ஆவார், மேலும் அவர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆசஸ் ஒரு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம், 2020 நிலவரப்படி, இது உலகின் 6 வது பெரிய PC விற்பனையாளர் ஆகும். நிறுவனம் மடிக்கணினிகள், பிசிக்கள், திசைவிகள், ஜி.பீ.யுகள், ஸ்மார்ட்போன்கள், கணினி மதர்போர்டுகள், ப்ரொஜெக்டர்கள், சேமிப்பக சாதனங்கள், ரேம் மற்றும் பல தயாரிப்புகளை உருவாக்குகிறது.

அனைத்து சீன செயலியும் சாதனமும் உங்கள் தரவை திருடி, அதை வேற்று நாட்டு அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் தீர்மானமாக சொல்ல முடியாது. எனவே, அதை மையமாக கொண்டு ஒரு தயாரிப்பை ஒருபோதும் தீர்மானிக்கவோ அல்லது வாங்கும் முடிவையோ எடுக்கவோ கூடாது. ஒரு பொருளைத் தேர்வு செய்யும் போது, ​​வன்பொருள், வடிவமைப்பு, உருவாக்க-தரம் மற்றும் நீடிக்கும் காலம் போன்ற அம்சங்களைப் பற்றி தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பொருள் தோன்றிய நாட்டைப் பற்றி கவலை கொள்பவராக இருந்தாலும், ஆசஸ் தயாரிப்பை கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும், ஏனெனில் அது சீன நிறுவனம் அல்ல.

Views: - 52

0

0