அடப்பாவிகளா… ஒரே கம்பெனியோட பிராண்ட்னா இப்படியா பண்ணுவீங்க? அதிர்ச்சியில் ஒன்பிளஸ் ரசிகர்கள்!!

30 August 2020, 5:30 pm
Is OnePlus Clover A Carbon Copy Of Oppo A53
Quick Share

வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் குறித்த சமீபத்திய தகவல் கசிவு இணையத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்காக அறியப்படும் ஒரு பிராண்டான ஒன்பிளஸ் இறுதியாக ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை உருவாக்குவதாக தகவல் வெளியானதை நாம்  ஏற்கனவே பார்த்திருந்தோம், அதுவும் 400 தொடர் குவால்காம் சிப்செட் மற்றும் 720p டிஸ்ப்ளே உடன் வரும்  என்ற தகவல்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிற வைத்தன.

இப்போது, ​​ஒன்பிளஸ் க்ளோவர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ A53 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கக்கூடும் என்று ஒரு தகவல் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இது ஒன்பிளஸ் பிராண்டின் மலிவு விலை போனிற்காக காத்திருக்கும் ரசிகர்களை ஆழ்ந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒப்போ A53 இன் அனைத்து அம்சங்களும் விவரக்குறிப்புகளும் வரவிருக்கும் பட்ஜெட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுடன் ஒத்துப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஆகிய இரண்டு பிராண்டும் பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதையும், நாம் ஏற்கனவே அறிவோம். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஓப்போவால் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஓப்போ A53 போலவே இருக்கும் என்றால் நாங்கள் ஏன் இந்த ஒன்பிளஸ்  க்ளோவர் போனுக்கு காத்திருக்க வேண்டும் என்று கடுப்பில் இருக்கின்றனர் ஒன்பிளஸ் ரசிகர்கள். இப்போதைக்கு இந்த தகவல்கள் வதந்தியாகவே உள்ளன. உண்மையான விவரங்களை அறிந்துக்கொள்ள ஒன்பிளஸ் போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.

Views: - 7

0

0