நிலவிற்கான பிரத்தியேக கழிப்பறையை வடிவமைப்பவருக்கு இவ்வளவு பெரிய பரிசு தொகையா???

29 June 2020, 7:33 pm
Quick Share

நிலவில் திறமையாக செயல்படும் ஒரு  கழிப்பறையை வடிவமைத்து கொடுத்தால் நாசா நிறுவனம்  உங்களுக்கு பணம் கொடுக்கும். ஆம், நீங்கள் அதை சரியாக படித்தீர்கள்! மைக்ரோ கிராவிட்டி மட்டுமின்றி எதிர்கால லூனார் லேண்டர் விண்கலத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு கழிப்பறையை உருவாக்க உலகெங்கிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கு  நாசா அழைப்பு விடுத்துள்ளது. 

சந்திரனுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கழிப்பறையை வடிவமைத்து தருபவர் 20,000 அமெரிக்க டாலர்களை பரிசாக பெறுவார். இரண்டாவது சிறந்த மற்றும் மூன்றாவது சிறந்த கண்டுபிடிப்புக்கும் வெகுமதி உள்ளது. மேலும் அவை முறையே 10,000 மற்றும் 5,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கண்ணோட்டத்தில் குறிப்பிடப்பட்ட நாசாவின் சவாலாவது, “இந்த சவால் மனித கழிவை சேகரித்தல் மற்றும் அதனை பாதுகாப்பாக கட்டுப்படுத்துதல்  பிரச்சினைக்கு தீவிரமாக புதிய மற்றும் மாறுபட்ட அணுகுமுறைகளை ஈர்க்கும் என்று நம்புகிறது.”

நாசா சவாலை வெல்லும்  வெற்றிகரமான கழிப்பறை வடிவமைப்பு ஆர்டெமிஸ் என்ற திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்த திட்டமானது 2024 க்குள் முதல் பெண்ணையும் அடுத்த ஆணையும் சந்திரனில் தரையிறக்க திட்டமிட்டுள்ளது.

விண்வெளிக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளை மைக்ரோ கிராவிட்டியில் மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர  சந்திரனில் அல்ல. பூமியுடன் ஒப்பிடும்போது சந்திரனின் ஈர்ப்பு விசை ஆறில் ஒரு பங்கு ஆகும்.

இளையவர்களிடமிருந்து கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியாக, அவர்கள் ஜூனியர் பிரிவிற்கும் ஒரு பரிசை அறிவித்துள்ளனர். 18 வயதிற்கு உட்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் இந்த சவாலுக்கு தகுதி பெறுவார்கள். ஜூனியர் பிரிவில் முதல் மூன்று பங்கேற்பாளர்கள் பொது அங்கீகாரத்துடன் உத்தியோகபூர்வ நாசா-லோகோ செய்யப்பட்ட பொருட்களின் ஒரு பொருளைப் பெறுவார்கள்.

அடுத்த ஜென் நிலவு கழிப்பறையை உருவாக்குவதற்கான சவாலுக்கு சில விதிகள் உள்ளன:

* இது 4.2 கன அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

* இது 60 Decibel க்கு  குறைவான இரைச்சலுடன் செயல்பட வேண்டும். இது 100 அடி உயரத்தில் ஒரு ஏர் கண்டிஷனிங் சமமாகும்.

* எந்தவொரு விண்வெளி வீரரும் வயிற்றுப்போக்கு நோயால் அவதிப்படும் பட்சத்தில், ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் சிறுநீர் மற்றும் 500 கிராம் மலம் சேகரிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

* ஆர்ட்டெமிஸ் திட்டம் முதல் பெண்ணை நிலவிற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், சந்திரன் கழிப்பறையானது 114 கிராம் வரை மாதவிடாய் இரத்தத்தை சமாளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். 

* கழிவுகளை வெளியே சேமித்து வைக்கும் திறனுடன் இரண்டு பயன்பாடுகளுக்கு இடையில் ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே இருக்க வேண்டும்.