மனிதர்களுடனான இஸ்ரோவின் விண்வெளி பயணம் இந்த ஆண்டில் தான் நிகழுமாம்!

26 September 2020, 8:43 am
ISRO First Manned Mission To Low Earth Orbit Scheduled For December 2021
Quick Share

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் பற்றி தான் இப்போது சிறிது காலமாக அதிகம் பேசப்படுகிறது. இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டமாக, ககன்யான் திட்டம் ஒரு வருடத்திற்கும் மேலாக வளர்ச்சியில் உள்ளது. ‘இந்திய விண்வெளித் துறைக்கு புதிய சகாப்தத்தைப் பயன்படுத்துதல்’ (Ushering the New Era for Indian Space Sector) என்பது குறித்த சமீபத்திய சர்வதேச விண்வெளி மாநாடு இந்த விண்வெளி பயணம் குறித்த கூடுதல் தகவல்களை நமக்கு வழங்கியுள்ளது.

இஸ்ரோ ககன்யான் மிஷன்

“ககன்யான் திட்டத்திற்காக சில பகுதிகளில் பணியாற்றுவதற்காக தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை இஸ்ரோ நாடுகிறது” என்று மாநாட்டில் மனித விண்வெளி விமான மைய இயக்குனர் டாக்டர் உன்னிகிருஷ்ணன் நாயர் எஸ் கூறினார்.

நிச்சயமாக, ககன்யான் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள பல காரணிகள் உள்ளன. விண்வெளி வீரர்கள் பூமியின் முதன்மை சுற்றுப்பாதைக்கு செல்ல மூன்று நிலைகள் உள்ளன. தற்போதைய அட்டவணையின்படி, முதல் ஆளில்லா விண்வெளி பயணம் 2020 டிசம்பரில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது; ஜூன் 2021 இல் இரண்டாவது ஆளில்லா சோதனை விண்வெளி பயணம் நிகழும், மற்றும் டிசம்பர் 2021 இல் மனிதர்களுடனான இறுதி விண்வெளி பயணம் நிகழும்.

இருப்பினும், கொரோனா தொற்று மற்றும் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக, தாமதம் ஏற்படக்கூடும். மறுபுறம், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஊரடங்கு இருந்த போதிலும் எந்த தாமதமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இப்போது அறிவித்துள்ள அட்டவணை மாறுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விமானப்படை விமானிகள் ரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.

Views: - 5

0

0