பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ கூட்டணி….வெள்ளி கிரகத்தில் ஏலியன்களா!

Author: Dhivagar
6 October 2020, 12:13 pm
ISRO Partners With French Space Agency For Venus Mission Set For 2025
Quick Share

சந்திரயான்-3, ககன்யான் மிஷன் மற்றும் பல திட்டங்களின் அடுத்தடுத்த பல விண்வெளி பயணங்களுக்காக இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக சேர்வது வெள்ளி கிரகத்திற்கான பயண திட்டமாகும். பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES தகவலின் படி, இஸ்ரோவின் வீனஸ் மிஷன் 2025 ஆம் ஆண்டில் CNES ஏஜென்சி உடனான கூட்டணி உடன் நிகழும்.

இஸ்ரோ – வெள்ளி கிரக திட்டம்

இஸ்ரோ வீனஸ் மிஷனின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று VIRAL. அதாவது VIRAL என்பது வீனஸ் அகச்சிவப்பு வளிமண்டல வாயு இணைப்பு (Venus Infrared Atmospheric Gases Linker) என்று அர்த்தமாகும். இந்த கருவி ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு LATMOS வளிமண்டலங்கள், சூழல்கள் மற்றும் விண்வெளி அவதானிப்பு ஆய்வகம் ஆகியவை VIRAL ஐ வளர்ப்பதோடு இணைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் மற்றும் CNES தலைவர் ஜீன்-யவ்ஸ் லு கால் ஆகியோர் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் விண்வெளியில் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்தனர். இருப்பினும், வீனஸ் பயணம் குறித்து இஸ்ரோவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.

சமீபத்தில்,  ஏலியன்கள் வாழ்க்கையைப் பற்றிய விவாதத்திற்கான மையமாக வெள்ளி கிரகம் இருந்து வருகிறது. விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் வெள்ளி கிரகத்தில் பாஸ்பீனைக் கண்டுபிடித்தபோது, ​​அது வெள்ளி கிரகத்தில் நுண்ணுயிரிகளுக்கான இருப்பிடமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. வெள்ளி கிரகம் அதன் கொந்தளிப்பான மற்றும் அமில மேகங்களால் நிறைந்திருப்பதால் வசிக்க தகுதியில்லாத இடமென்று இதுநாள் வரையில் நம்பப்பட்டு வந்தது. பாஸ்பீனைக் கண்டுபிடித்தது இப்போது இந்த நம்பிக்கையை மாற்றிவிட்டது.

தற்போது, ​​இஸ்ரோ ஏற்கனவே MOM திட்டம் மூலம் செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 திட்டம் மூலம் சந்திரனை ஆராயவும் தயாராகி வருகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட பயணத்தை மேற்கொள்ளவும் ஆயத்தமாகி வருகிறது, இது இரண்டு ஆண்டுகளில் விண்ணில்  ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விண்வெளியில் இந்தோ-பிரெஞ்சு உறவுகள் முந்தைய பல திட்டங்களில் வெற்றிகரமாக இருந்துள்ளன. வரவிருக்கும் இஸ்ரோ வெள்ளி கிரக திட்டத்திலும் இந்த கூட்டணி மேலும் ஒரு வெற்றியைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Views: - 66

0

0