ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் itel A48 ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலையோ ரொம்ப ரொம்ப குறைவு!

Author: Hemalatha Ramkumar
18 August 2021, 9:17 am
itel A48, Android Go Smartphone Launched With Jio Benefits
Quick Share

ஐடெல் நிறுவனம் அதன் A-சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையை விரிவுப்படுத்தும் நோக்கில், மலிவு விலையிலான புதிய ஐடெல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஐடெல் A48 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இது புதிய வடிவில் ஜியோவின் பிரத்யேக நன்மைகளுடன் கிடைக்கிறது.

2 ஜிபி RAM மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உடன் கிடைக்கும் மிக மலிவான ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐடெல் A48 பெற்றுள்ளது. இதன் விலை ரூ.6,399 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்கிய 100 நாட்களுக்குள் திரை உடைந்தால் பயனர்கள் இலவசமாக ஒரு முறை திரை மாற்றும் வசதியையும் வழங்குகிறது.

ஜியோஎக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்

ஐடெல் A48 ஜியோஎக்ஸ்க்ளூசிவ் சலுகையுடன் கிடைக்கும். இந்த சிறப்பு சலுகையின் கீழ், ஐடெல் A48 ஸ்மார்ட்போனை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் ஜியோஎக்ஸ்க்ளூசிவ் சலுகைக்கு பதிவுசெய்தால் உடனடியாக ரூ.512 மதிப்பிலான சலுகையும் ரூ.4000 மதிப்பிலான கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.

இந்த சலுகையின் கீழ், ஐடெல் ஸ்மார்ட்போனின் பயனர்கள் ஜியோ நெட்வொர்க் வழியாக அதிவேக தரவு இணைப்பை அனுபவிக்க முடியும், அதே நேரத்தில் தினசரி இலவச எஸ்எம்எஸ், மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற இலவச அழைப்புச் சேவை ஆகியவற்றை வழங்கும். இந்த சலுகை புதிய மற்றும் தற்போதுள்ள ஜியோ சந்தாதாரர்களுக்கு பொருந்தும். இந்த சலுகை திட்டம் நுழைவு நிலை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மலிவு விலை மற்றும் தடையற்ற இணைப்பை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க விரும்புகிறது.

itel A48 விவரக்குறிப்புகள்

சிறந்த வடிவமைப்புக்காக 2.5D TP லென்ஸுடன் 6.1 இன்ச் HD+ IPS வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் ஐடெல் A48 வருகிறது. இதன் திரை 1560 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 19.5:9 என்ற திரை விகிதத்தைக் கொண்டுள்ளது. 

இதன் உட்புறத்தில், பல்பணி திறன்களுக்காக குவாட் கோர் 1.4GHz செயலியைப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 (கோ பதிப்பு) உடன் இயங்கும் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ஆகும்.

ஐடெல் A48 இன் மற்ற வன்பொருள் அம்சங்களில் 2 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் ஸ்பேஸிற்கான ஆதரவு ஆகியவை கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை ஸ்மார்ட் பவர் சேவிங் அம்சங்களுடன் 3000 mAh பேட்டரி உடன் இயங்குகிறது. பல அம்ச கைரேகை சென்சார் மற்றும் வேகமான ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, itel A48 LED ஃபிளாஷ் உடன் இரட்டை 5 MP AF பின்புற கேமரா மற்றும் Ai பியூட்டி மோட் உடன் வாட்டர் டிராப் நாட்ச் உள்ள 5 MP செல்ஃபி கேமராவைப் பயன்படுத்துகிறது. மேலும், ஸ்மார்ட்போனில் இரட்டை 4G VoLTE உள்ளிட்ட நிலையான இணைப்பு அம்சங்கள் உள்ளன. இது கிரேடேஷன் பிளாக், கிரேடேஷன் பர்பில் மற்றும் கார்டியன்ட் கிரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 353

0

0