ஜியோ ஃபேன்ஸி நம்பர் / VIP எண்களை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

21 August 2020, 5:29 pm
Jio Fancy Numbers: How to Book Jio Fancy/VIP Numbers Online
Quick Share

இந்நாட்களில், ஒரு ஃபேன்ஸி மொபைல் எண்ணைப் பயன்படுத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது மற்றும் பலரும் இதுபோன்ற எண்களையே விரும்புகிறார்கள், ஏனெனில் இவை வழக்கமான மொபைல் எண்களை விட நினைவுகூர எளிதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். இந்த மொபைல் எண்கள் அவற்றில் ஒரு வடிவத்தைக் (pattern) கொண்டுள்ளன, அவை நம்மை ஈர்க்கும் காரணமாகின்றன. அதிர்ஷ்ட எண்களுடன் மக்கள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் இதைத் தேர்ந்தெடுப்பதும் பொதுவானது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைகளுடன் தொகுக்கப்பட்ட ஒரு ஆடம்பரமான மொபைல் எண்ணை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், கீழேயுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஃபேன்ஸி ரிலையன்ஸ் ஜியோ எண்ணைப் பெறலாம். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால் மட்டுமே உங்களுக்கு இது போன்ற ஒரு ஃபேன்ஸி எண் கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஜியோ ஃபேன்ஸி எண்களை பெறுவது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ நேரடியாக அதன் சந்தாதாரர்களுக்கு ஃபேன்ஸி எண்களை விற்கவில்லை, ஆனால் உள்ளூர் நிறுவனம் அல்லது அலுவலகம் அதைச் செய்கின்றன. இந்த ஏஜென்சிகள் அல்லது அலுவலகங்கள் அவர்களிடம் ஏராளமான எண்களை வைத்திருப்பார்கள், மேலும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

உங்களுக்கு பிடித்த ஃபேன்ஸி ஜியோ எண்ணைப் பெற உதவும் பல ஆன்லைன் ஏஜென்ட் நிலையங்கள் உள்ளன. அத்தகைய ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டு, கிடைக்கக்கூடிய ஆடம்பரமான ஜியோ எண்களின் பட்டியலைச் சரிபார்க்கவும். நீங்கள் தேர்வுச் செய்து முடிந்ததும், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது, ​​யுனிக் போர்ட்டிங் கோட் Unique Porting Code (UPC) மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு விலைப்பட்டியல் கிடைக்கும். மேலும், இந்த எண்ணைப் பெற அருகிலுள்ள கடைக்குச் செல்லவும்.

அப்படி இல்லையெனில், உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பேன்சி எண்ணைக் கொண்திருந்தால், உங்கள் பெயருக்கு எந்த எண்ணை மாற்றிக்கொண்டு அதை ஜியோ நெட்வொர்க்கிற்குப் போர்ட் செய்யலாம்.

சிக்கல் இதுதான்!

சரி, ஒரு ஜியோ ஃபேன்ஸி எண்ணைப் பெறுவதில் சிக்கல் என்னவென்றால், இதற்கான செயல்முறை விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் ரூ.1,000 முதல் ரூ.25,000 ரூபாய் வரை உங்களுக்கு தேவையான ஃபேன்ஸி ஜியோ எண்ணைப் பெறச் செலுத்த வேண்டியிருக்கும்.

Views: - 169

0

0